சேலம் மாவட்டத்தில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் வெளியாகியிருக்கிறது.


சேலத்தில் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வில் விரைவில் நடைபெறும் என்று மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாவட்டங்களை தாண்டி அடுத்தபடியாக சேலத்தில் மெட்ரோ அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வுப்பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.
ஆர்.டி.ஐ. மூலமாக மெட்ரோ நிறுவனத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏப்ரல் மாதத்தில் இறுதி செய்யப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இந்த மூன்று மாவட்டங்களுக்கான மெட்ரோ அமைப்பது தொடர்பான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் மற்றும் சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் அனைத்தும் ஏப்ரல், மே மாதத்தில் இறுதி செய்யப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் கூடுதல் தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட சாத்தியக்கூறு ஆய்வு பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் வரக்கூடிய ஏப்ரல், மே மாதத்தில் சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் என்பது இறுதிச் செய்யப்படும் எனவும் அதற்கு அடுத்தபடியாக தமிழக அரசிடம் முறையாக சமர்ப்பிக்கப்படும் எனவும் மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொது போக்குவரத்தில் மிக முக்கியமான ஒன்றாக மாறியிருக்கும் மெட்ரோ அடுத்தடுத்து தமிழக முழுவதும் இருக்கக்கூடிய மாவட்டங்களில் விரிவுபடுத்துவது அடுத்த கட்ட பணிகளாக பார்க்கப்படுகிறது.

அதில் சென்னை, கோவையில் குறிப்பாக கோவையில் சாத்தியக்கூறு ஆய்வுப் பணிகளும் விரிவான சுற்றறிக்கையும் சமர்ப்பிக்க உள்ள நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்கியதுமே கட்டுமான பணிகளை மெட்ரோ நிர்வாகம் தொடங்க உள்ளது.
சமீபத்தில் மதுரையிலும் அடுத்தடுத்து பணிகளை மெட்ரோ நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக 75 நாட்களில் 31 கிலோமீட்டர் தொலைவில் அமைய உள்ள இந்த மெட்ரோ திட்டப் பணிகளுக்கான விரிவான சுற்றறிக்கை சமர்ப்பிக்கப்படும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக தற்போது சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் சாத்தியக்கூறு ஆய்வு பணிகளை இறுதி செய்து விரைவில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


