spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஜார்க்கண்ட் முதலமைச்சர் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்

ஜார்க்கண்ட் முதலமைச்சர் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்

-

- Advertisement -

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவரது மனைவி கல்பனா சோரனுடன் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் குடியரசு தலைவரை டெல்லியில் சந்தித்தார்நில அபகரிப்பு மற்றும் முறைகேடு வழக்குகளில் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் 5 மாத சிறைக்குப் பிறகு கடந்த மாதம் 28ல் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். ஜூலை நான்காம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பு ஏற்றுக்கொண்ட ஹேமந்த் சோரன் மரியாதை நிமித்தமாக கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் தலைவர்களை  டெல்லி சந்தித்து பேசினார்.

we-r-hiring

காங்கிரஸ் , ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுவதோடு சிறையில் இருந்த போது தனக்கு ஆதரவு குரல் கொடுத்ததற்காக நன்றியும் ஹேமந்த் சோரன் தெரிவித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நியமித்தமாக சந்தித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து குடியரசு தலைவர் மாளிகையில், நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வை சந்தித்து பேசினார். குடியரசு தலைவர் உடனான சந்திப்பின்போது ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரனும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ