
முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் மஞ்சள் நிற தாவணியில் குத்தாட்டம் போட்ட பிரியங்கா சோப்ரா
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் மற்றும் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட் ஆகியோரின் திருமண விழா ஜூலை மாதம் 12ஆம் தேதி மும்பையிலுள்ள ஜியோ வோர்ல்டு கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி தங்களது இளைய மகனின் திருமணத்திற்காக பிரம்மாண்டமான ஏற்பாடுகளைச் செய்தனர்.
இத்திருமண விழாவிற்காக உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.
சினிமா பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்- வீராங்கனைகள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஷாருக்கான் வெளிநாட்டில் நடந்து கொண்டு இருந்த தனது படப்பிடிப்பினை நிறுத்தி விட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் குடியேறிய, பிரியங்கா சோப்ரா தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பில் இருந்து தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அவரது கணவர் நிக் ஜோன்ஸ் உடன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு வந்துள்ளார்.
அம்பானி வீட்டு திருமண விழாவில் தன்னை மறந்து நடனமாடிய ரஜினிகாந்த்!
தக தக வென மஞ்சள் நிற தாவணியில் திருமணத்தில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா குத்தாட்டம் போட்டுள்ளார். தனது கணவருடன் திருமண இடத்திற்கு வந்ததில் இருந்தே, இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் உலா வந்தது. அத்துடன் அவர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.