தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது.
நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றிலிருந்தே ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி பயணம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
அரசு சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 1000 பேருந்துகள் வரை இயக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் 500 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
முன்பதிவு செய்யப்பட்ட பயணிகள் குழப்பம் அடைவதை தவிர்ப்பதற்காக அரசு பேருந்துகளின் எண், நடத்துனரின் பெயர், செல்போன் அடங்கிய பலகைகள் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக அதிக அளவிலான பயணிகள் வருகை தந்துள்ளனர்.