HomeBreaking Newsகரூரில் த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை வழங்கி அமைச்சர் வரவேற்பு

கரூரில் த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை வழங்கி அமைச்சர் வரவேற்பு

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கரூர் அட்லஸ் மைதானத்தில் இன்று ‘கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம்’ வெகு விமரிசையாகத் தொடங்கியது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் முதன்முறையாக கரூர் வருகை தந்தது கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் சந்திப்பு

we-r-hiring

இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த முதல்வர் விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கரூர் வருகை தந்தார். நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்திற்கு முதல்வர் வந்தடைந்ததும், திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை வரவேற்றனர். அமைச்சர்கள் புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், அருண் ராஜ் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் முன்னதாக முதல்வரை வரவேற்றனர்.

திருவள்ளுவர் சிலை பரிசளிப்பு:
நிகழ்ச்சியின் தொடக்கமாக அமைச்சர் ராஜ்மோகன் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக, பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, தமிழக முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து அமைச்சர் விஜயலட்சுமி தனது வரவேற்புரையை ஆற்றினார்.

இந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சுமார் 5000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மைதானமே நிரம்பி வழிந்தது. இந்நிகழ்வில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதி சிறப்புரையாற்றினார். ஆட்சி அமைத்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் முதல்வர் விஜய் காட்டி வரும் ஈடுபாடு, தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

MUST READ