HomeBreaking Newsநாளை வெளியாகும் 'ரெட்ரோ' முதல் பாடல்..... ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

நாளை வெளியாகும் ‘ரெட்ரோ’ முதல் பாடல்….. ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

-

- Advertisement -

ரெட்ரோ படத்திலிருந்து கண்ணாடி பூவே பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.நாளை வெளியாகும் 'ரெட்ரோ' முதல் பாடல்..... ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு!

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு கங்குவா திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்துள்ளார். இதனை 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.

அதன்படி இந்த படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அடுத்தது இந்த படத்தில் இருந்து கண்ணாடி பூவே எனும் முதல் பாடல் நாளை (பிப்ரவரி 13) மாலை 5 மணி அளவில் வெளியாக இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் தற்போது இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ