spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்

பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்.. வாழ்த்திய முதலமைச்சரை திரண்டு வரவேற்ற தொண்டர்கள்

-

- Advertisement -

கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் ரோடு ஷோ நடத்திய முதல்வர் ஸ்டாலினை காண ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில், ஜூன் 15,16 தேதிகளில் தஞ்சாவூரில் பயணம் மேற்கொள்வார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

we-r-hiring

அதன்படி, இதற்காக ஞாயிறு காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர், அங்கிருந்து காரில் கல்லணைக்கு சென்றார். அங்கு அங்கு மாலை 6 மணிக்கு கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர், “பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும். காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

அதன் பின்னர் தஞ்சை வந்த அவர், கலைஞர் அறிவாலயத்தில் இருந்து ரயிலடி, ஆத்துப்பாலம் வழியாக பழைய பஸ் நிலையத்துக்கு 3 கிமீ தூரம் ரோடு ஷோ நடத்தினார். நடந்து சென்று மக்களை சந்தித்த அவரை ஏராளமானோர் வரவேற்றனர். அங்கு பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த, கலைஞரின் சிலையை திறந்து வைத்தார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “காடுகொன்று நாடாக்கிக் குளந்தொட்டு வளம்பெருக்கிப் பிறங்கு நிலைமாடத்து உறந்தை போக்கி” எனப் பட்டினப்பாலை பாடும் கரிகாற்பெருவளத்தான் உருவாக்கிய கல்லணையில் நீர் திறக்கப்பட்டது! பொன்மணியென நெல்மணி விளைந்திடப் புறப்பட்ட பொன்னி நதியால் தஞ்சை செழிக்கட்டும்! உழவர் பெருமக்கள் வளம் காணட்டும்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

 

MUST READ