Homeசெய்திகள்தேர்தல் 20262026 தேர்தல் - வேட்புமனு திரும்பப் பெறும் கால அவகாசம் நிறைவு…

2026 தேர்தல் – வேட்புமனு திரும்பப் பெறும் கால அவகாசம் நிறைவு…

-

- Advertisement -

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய நிலையில் வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.2026 தேர்தல் - வேட்புமனு திரும்பப் பெறும் கால அவகாசம் நிறைவு…

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வந்த வேட்புமனு செயல்முறையின் முக்கிய கட்டமான திரும்பப் பெறும் கால அவகாசம் இன்று நிறைவடைந்துள்ளது. வரும் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

we-r-hiring

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 7,599 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் பின்னர் ஏப்ரல் 7ஆம் தேதி, ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனைத்து வேட்புமனுக்களையும் பரிசீலனை செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு, 5,132 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், 2,467 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் இன்று என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிற்பகல் 3 மணியுடன் இந்த கால அவகாசம் நிறைவடைந்தது. சமீபத்திய தகவல்களின் அடிப்படையில், இதுவரை 143 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒவ்வொரு தொகுதியிலும் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தங்களது அலுவலக அறிவிப்பு பலகைகளில் வெளியிட உள்ளனர். இதன் மூலம் தேர்தல் களத்தில் இறுதி போட்டியாளர்கள் உறுதி செய்யப்படவுள்ளனர்.

அடுத்த கட்டமாக, தேர்தல் சின்னங்கள் ஒதுக்கும் பணிகள் தொடங்கும். அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சின்னங்களை ஒதுக்குவர். ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் இருந்து பொதுச் சின்னங்களை பெற்றுள்ள கட்சிகளுக்கு அதே சின்னங்கள் மீண்டும் வழங்கப்படும்.

தேர்தல் ஆணையம் ஒருதலை பட்சமாக இருக்கக் கூடாது – செல்வப்பெருந்தகை

MUST READ