Homeசெய்திகள்'விலங்கு' சீரிஸை அடுத்து மீண்டும் புதிய வெப் சீரிஸுக்கு தயாராகும் விமல்!

‘விலங்கு’ சீரிஸை அடுத்து மீண்டும் புதிய வெப் சீரிஸுக்கு தயாராகும் விமல்!

-

விமல் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய வெப் சீரிஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

தொடர் தோல்வி படங்களைக் கொடுத்து வந்த விமலுக்கு விலங்கு வெப் சீரிஸ் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் வெளியான மிகச்சிறந்த வெப் சீரிஸ் விலங்கு. ஒவ்வொரு எபிஸோடிலும் ரசிகர்களை விறுவிறுக்க வைத்திருந்தார் இயக்குனர்.

அதை அடுத்து விமலுக்கு மார்க்கெட் சற்று ஏறியது. தற்போது விமல் 7 படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் விமல் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரிக்கின்றனராம். ‘என்கிட்ட மோதாதே’ படத்தின் இயக்குனர் ராமு செல்லப்பா இந்த சீரிஸை இயக்க இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்திற்குள் சீரிஸின் பூஜை நடைபெற உள்ளதாம். மே முதல் வாரத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் சரவண சக்தி இயக்கத்தில் விமல் ‘குலசாமி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நடிகை தன்யா ஹோப் கதாநாயக நடித்துள்ளார். குலசாமி படத்திற்கு விஜய் சேதுபதி வசனங்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாரடின் நிர்மல் குமார் என்பவர் இயக்கத்தில் ‘தெய்வ மச்சான்’ என்ற படத்திலும் விமல் நடித்துள்ளார்.

MUST READ