spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு- எடப்பாடி பழனிசாமி

மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு- எடப்பாடி பழனிசாமி

-

- Advertisement -

மக்களை திசை திருப்பவே சனாதன பேச்சு- எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

"ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது தி.மு.க. அரசு"- எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
File Photo

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது. மக்களை திசை திருப்புவதற்கான நாடகத்தை உதயநிதி ஸ்டாலின் அரங்கேற்றி இருக்கிறார். மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகிறார். சனாதன தர்மத்தை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக. உதயநிதி எதையாவது பேசி தன்னை முன்னிலைப்படுத்த பார்க்கிறார்.

பட்டியலின மக்களுக்கு துரோகம், அநீதி இழைத்தவர்கள் தான் இன்று சனாதன தர்மத்தை பற்றி பேசுகிறார்கள். ஊழலை மறைப்பதற்கும் விலைவாசி உயர்வை மறைப்பதற்கும் இன்றைக்கு இந்த நாடகத்தை திமுக அரசு அரங்கேற்றி இருக்கிறது. வாரிசு அரசியல் செய்யும் காலம் விரைவில் முடிவு கட்டப்படும்” என்றார்.

MUST READ