Homeசெய்திகள்தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவை - கனிமொழி

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவை – கனிமொழி

-

- Advertisement -

தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது என திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவை - கனிமொழி

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் இணைந்து நடத்தும் இலவச மார்பக புற்றோய் கண்டறிதல் முகாம் தொடக்க விழா நிகழ்வு திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்று வருகிறது. நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பங்கேற்றார்.மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்வதன் அவசியம் மற்றும் மார்பக புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கனிமொழி எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

சீமான் அப்டேட் இல்லாத அரசியல்வாதி – மா.சுப்பிரமணியன் பதில்

திமுக கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. நாட்டின் இறையாண்மை மற்றும் மதச்சார்பின்மையை காப்பது தான் கூட்டணியின் முக்கிய கொள்கை. இந்தியா கூட்டணி ஒற்றுமையாக உள்ளதால் பிளவுபடுத்த முடியாது. இந்தியா கூட்டணி வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ள கூட்டணி என்பதால் அதை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் 2026 தேர்தலிலும் திமுக உடன் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் தெளிவாக தன்னுடைய நிலைப்பாடை வெளிப்படுத்தியிருக்கிறார் என தெரிவித்தார். மேலும்,தமிழ்நாட்டில் நல்லாட்சியை பற்றி அதிமுக பேசுவது நகைச்சுவையாக உள்ளது எனவும் திமுக நல்ல ஆட்சியை மக்களுக்கு வழங்குவதால் தான் அனைவரும் விமர்சிப்பதாக கனிமொழி தெரிவித்தார்.

MUST READ