spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…

போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…

-

- Advertisement -

துணை தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான தாலுகா அலுவலகம் சீல் குத்தப்பட்டு, முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பம்  கண்டுபிடிப்பு. துணை தாசில்தார் நேரடியாக புகார் தெரிவித்ததால், போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தற்போது உயர்கல்வி படிப்பதற்காக சென்டாக மூலம் மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். மாணவர்களின் இடஒதுக்கீட்டுக்காக அவர்களின் சாதி, குடியிருப்பு, வருமானவரி உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற வேண்டியுள்ளது. இதற்காக மாணவர்கள் பெற்றோர்கள் தாசில்தார் அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர் தாசில்தார் அலுவலகத்தில், அனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது மகளுக்கு சாதி சான்றிதழ் பெற சென்றுள்ளார். அப்போது சான்றிதழ் பெறுவதற்காக ஆதார்கார்டு, ரேஷன்கார்டு மற்றும் பிற சான்றிதழ்களுடன் கடந்த ஏப்ரல் மாதம் பென்ஷன் பெறப்பட்டதாக கூறி ஒரு சாதி சான்றிதழை ஆவணமாக சமரப்பித்துள்ளார்.

இதை துணை தாசில்தார் பிரேம்சந்தர் பார்த்துவிட்டு, இது என்னுடைய கையொப்பம் இல்லை எனக்கூறி அங்கிருந்து ஊழியர்களிடம் அதனை ஆய்வு செய்யமாறு கூறியுள்ளார். பிறகு ஊழியர்கள் அச்சான்றிதழை ஆய்வு செய்த போது அந்த சான்றிதழின் பதிவு எண் ஆவண பதிவேடுகளில் இல்லை என தெரிவித்தனர். இதையடுத்து அந்த சான்றிதழ் போலி என உறுதிசெய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தாசில்தார் சேகரிடம் துணை தாசில்தார் தெரிவித்தார் பிறகு தாசில்தார் அந்த சான்றிதழை மறு ஆய்வு செய்து, போலி சான்றிதழ் சம்பந்தமாக வில்வியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

we-r-hiring

முதற்கட்ட விசாரணையில், அந்த அனந்தபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர்  காரணம் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஸ்ரீதர் சிக்கினால் தான், போலீசில், அதிகாரிகள் போலி கையெழுத்து தயாரித்து கொடுத்தது யார் என்பது தெரிய வரும். இதன் பின்னணியில் இருக்கும் கும்பல் குறித்து முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதுச்சேரி அரசு அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் காவலர்களிடம் தகராறு… நடிகர் அஜய் வாண்டையார் கைது!

MUST READ