spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்பயணத்தில் பெட்ரோல் காலியாகி தவிக்கிறீங்களா? இந்த 'ஆப்' இருந்தால் போதும்..!

பயணத்தில் பெட்ரோல் காலியாகி தவிக்கிறீங்களா? இந்த ‘ஆப்’ இருந்தால் போதும்..!

-

- Advertisement -

காரில் நீண்ட தூரம் பயணம் செய்பவர்களின் வசதிக்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஃபியுயல்@கால்*(Fuel@Call) என்ற ஆப்பை அறிமுகம் செய்து உள்ளது.

இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தோ அல்லது ஆப் ஸ்டோரில் இருந்தோ டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். பயணம் செல்லும் வழியில் கார் நின்று விட்டால் உடனடியாக இந்த ஆப்பை பயன்படுத்தி ஆன்லைனில் உங்களுக்கு அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் அல்லது டீசல் ஆர்டர் செய்யலாம்.

we-r-hiring

உடனடியாக உங்களுக்கு ஒர் ஓடிபி அனுப்பப்படும். உங்களுக்கு ஓடிபி வந்ததும் ஆர்டர் கன்ஃபார்ம் செய்து அருகில் இருக்கும் பெட்ரோல் பங்கில் இருக்கும் வாகனம் மூலம் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வருவார்கள். உங்களுக்கு வந்திருக்கும் ஓடிபி எண்ணை அவர்களிடம் கூறினால் அவர்கள் நீங்கள் ஆர்டர் செய்த பெட்ரோல் அல்லது டீசலை நிரப்பி தருவார்கள்.

யுபிஐ, டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு என எந்த வழியில் வேண்டுமானாலும் பணத்தை செலுத்தலாம். ஒருவேளை நீங்கள் உங்களின் ஆர்டரை கேன்சல் செய்தால் அதற்கு ரூபாய் 100 அபராத கட்டணமாக வசூல் செய்து விடுவார்கள்.\

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ஆப் மூலமாக எந்த இடங்களில் இருந்தும் நீங்கள் பெட்ரோல் டீசல் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ள முடியும். பயன்படுத்துவதற்கு எளிதான இந்த ஆப்பில் அடுத்த பெட்ரோல் பங்க் எங்கு உள்ளது என்பது போன்ற தகவல்களையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். அதே போல் நீங்கள் ஆர்டர் செய்த பெட்ரோல் டீசலை எப்போது உங்களுக்கு கிடைக்கும் என்பதையும் உங்களால் போனில் ட்ராக் செய்ய முடியும்.

ஆரம்பத்தில் கனரக வாகனங்களுக்கு மட்டும் இந்த சேவையை வழங்கி வந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், தற்போது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் இந்த சேவையை வழங்குகிறது.

MUST READ