spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசுட்டுவீழ்த்தப்பட்ட 5 விமானங்கள்! உண்மையை சொன்ன ஜெனரல்! கடும் கோபத்தில் மோடி!

சுட்டுவீழ்த்தப்பட்ட 5 விமானங்கள்! உண்மையை சொன்ன ஜெனரல்! கடும் கோபத்தில் மோடி!

-

- Advertisement -

பாகிஸ்தானுடனான மோதலில் இந்தியாவின் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக முப்படை தலைமை தளபதி ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், இதன் மூலம் மோடியை ஹீரோவாக முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்து ஆப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இந்திய போர் விமானங்கள் இழப்பு குறித்து மலேசியாவில் முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அளித்துள்ள நேர்காணல் குறித்தும், பிரதமர் மோடிக்கு வலுக்கும் எதிர்ப்பு குறித்தும் மூத்த பத்திரிகையாளர் நாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதை முப்படை தலைமை தளபதி அனில் சவுஹான் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார். ஏற்கனவே முப்படை அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பின்போது, இந்திய விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டுவீழ்த்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, விமானப்படை அதிகாரி பார்த்தி என்பவர் இழப்புகள் முக்கியம் அல்ல. நோக்கங்களை அடைந்துவிட்டோம் என்பதுதான் முக்கியமானது என்று சொன்னார். அப்போதே விமானங்களை இழந்துவிட்டதை மறைமுகமாக ஒப்புக்கொண்டனர். ஆபரேஷன் சிந்தூர் மே 7ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அடுத்த நாளே பாகிஸ்தான் தாங்கள் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும், அவற்றில் 3 ரபேல் விமானங்கள் என்றும் சொன்னது. தற்போது முப்படை தளபதி அனில் சவுஹான், சிங்கப்பூரில் புளூம்பெர்க், ராய்ட்டர்ஸ் நிறுவனங்களுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார். இரு தரப்பில் உள்ள பகுத்தறிவு சிந்தனை வாய்ந்தவர்களுக்கு அணு ஆயுதப்போரின் விளைவுகள் தெரியும். அதனால் பாகிஸ்தான் நிதானத்துடன் செயல்பட்டனர். இதனால் அணு ஆயுத மோதல் என்கிற விஷயத்திற்கு போவதற்கான வாய்ப்புகளே கிடையாது என்று  சொன்னார்.

முப்படை தளபதியின் பேச்சு தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்தியாவில் வலியுறுத்தி வருகிற நிலையில் சிங்கப்பூரில் இருந்து செய்தி வருகிறதே. அது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளன. தற்போதவது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை கூட்டி ஆபரேஷன் சிந்துர் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் இதனை மறுக்கும் பாஜக, விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும், காங்கிரஸ் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறியுள்ளது. கார்கில் போரின்போது அமைக்கப்பட்டது போன்று மதிப்பாய்வு குழுவை அமைக்கவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதேவேளையில், பிரதமர் மோடி போகிற இடம் எல்லாம், ஆபரேஷன் சிந்தூரில் தன்னை ஒரு ஹீரோவாக முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரத்துக்கு தலைமை தளபதியின் பேச்சு ஆப்பு வைத்திருக்கிறது.

ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து விளக்கம்! அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு…

அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்றுவரை 12 முறை இந்தியா – பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்று சொல்லிவிட்டார். ஆனால் இந்த கருத்தை இதுரை பிரதமர் மோடி மறுக்கவில்லை. இரண்டாம் கட்ட, 3ஆம் கட்ட ராணுவ அதிகாரிகள் தான் அதை மறுத்தார்கள். தற்போது கூட விக்ரம் சிஸ்ரி அமெரிக்காவில் உள்ளார். அவர் இருக்கிற போதே டிரம்ப் நான்தான் போரை நிறுத்தினேன் என்கிறார். இது இந்தியா ராஜந்திர முயற்சிகளில் தோல்வி அடைந்துவிட்டது என்பதை தான் இது காட்டுகிறது. இந்தியா எம்பிக்கள் குழுவை அமைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பியபோதும், அந்த நாடுகள் யாரும் வெளிப்படையாக பாகிஸ்தானை கண்டிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு உலக வங்கி, ஐஎம்எப் போன்றவை கடனுதவி வழங்குகின்றன. இந்தியா என்ன செய்தாலும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த முடியவில்லை என்பதுதான் எதார்த்தமாகும். நீங்கள் போருக்கு ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் ஓரளவு  ஆதரித்திருக்க வாய்ப்பிருக்கிறது. நீங்கள் கிட்டத்தட்ட 4 நாட்கள் மினி போரை நடத்தி ஒரு பதற்ற சூழலை உருவாக்கினீர்கள்.

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதலமைச்சருமான மமதா பானர்ஜி காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் சிந்தூர் என்பது கணவர்கள்தான் மனைவிகளுக்கு வைக்க வேண்டும். நீங்கள் யார் சிந்தூர் வைப்பதற்கு? அப்படி வைப்பதாக இருந்தால் உங்கள் மனைவிக்கு வையுங்கள் என்று சொல்லியுள்ளார். மோடியின் மனைவி குஜராத்தில் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளது போன்று இருக்கிறார். அவரை பத்திரிகையாளர்கள் சந்திக்க முடியாது. தன் மனைவியையே பொதுவெளியில் அங்கீகரிக்காத மோடி, நாட்டு பெண்களுக்கு சிந்தூர் வைக்க முடியுமா? என்று கேள் எழுப்பியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆரம்பத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்தன. தற்போது தான் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த தொடங்கி உள்ளன.இனி தொடர்ந்து கேட்பார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ