இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த அறிவிப்பு என்பது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலையீட்டின் பேரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் மற்றும் மோடி – ஆர்எஸ்எஸ் அமைப்பு மோதல் விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனலில் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: – ஆர்.எஸ்.எஸ் – மோடி இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இறுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது பின்னர் தான் தெரியவரும். அந்த கிளைமாக்ஸ் தள்ளிக்கொண்டே போய் கொண்டிருக்கிறது. அதுதான் இன்று நடைபெற்றுள்ளது. திடீரென பகல்காம் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதல் பீகார் தேர்தலை ஒட்டி நடைபெற்று இருக்கலாம் என்று சொல்கிறார்கள். தாக்குதல் நடத்திய 6 பேரில் ஒருவர் கூட பிடிபடவில்லையா? என்கிற சந்தேகம் எழுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தி உள்ளனர். ஆனால் இது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. ஏனென்றால் நாடாளுமன்றத்தை கூட்டினால், எதிர்க்கட்சிகள் எழுப்புகிற கேள்விக்கு மோடியால் பதில் அளிக்க முடியாது. பாஜக ஆதரவாளர்களை தவிர நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும். ஏதோ ஒன்று தவறாக நடைபெற்றுள்ளது என்று.
இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக ஊடக விவாதங்களில் பங்கேற்கும் முன்னாள் ராணுவத்தினர், போர் முறைகள் குறித்தும், தாக்குதல் குறித்து விரிவாக பேசுவார்கள். ஆனால் இந்த போர் எப்படி தொடங்கியது? போரை ஏன் நிறுத்தினார்கள்? என்றும் பார்க்க வேண்டும். இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு சந்தேகம் உள்ளது. தாக்குதல் நடத்திய அந்த 6 பேர் யார்? அவர்களை ஏன் பிடிக்க முடியவில்லை? ஏன் அங்கு ராணுவம் பாதுகாப்பு போடவில்லை? பாதுகாப்பு குறைபாடுகளை கூட விட்டுவிடலாம். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் எப்படி நாட்டை விட்டு தப்பியோடினார்கள் . அப்படி தப்பிச்செல்கிறார்கள் என்றால் எதற்காக இத்தனை லட்சம் வீரர்கள் அங்கே உள்ளனர் என்று கேள்வ எழுகிறது. புகழ்பெற்ற தத்துவ ஞானி ஓஷோ சொல்கிறார், போர்கள் எல்லாம் எதற்காக நடைபெறுகிறது என்றால்? அமைதிக்காக நடைபெறுகிறது. எனவே எனக்கு அமைதி வேண்டும், நீங்கள் போரை நடத்துங்கள், என்கிறார்.
இந்தியா – பாகிஸ்தான் மோதலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏன் தலையிடுகிறார். சர்வதேச அரசியலில் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதற்கான போட்டி காலங்காலமாக அமெரிக்கா – ரஷ்யா இடையே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது 3வது இடத்திற்கு சீனா வந்துவிட்டது. அதுபோக ஐரோப்பிய நாடுகள் அடங்கிய ஜி7 கூட்டமைப்பும் நாங்கள் தான் பெரிய ஆள் என்று சொல்கிறார்கள். இந்த நேரத்தில் பிரதமர் மோடி, சர்வதேச அரசியலுக்குள் புகுந்து எதையாவது சாதித்துவிடலாம் என்று பார்க்கிறார். அதனால் அவருடைய செல்வாக்கை காலி செய்வதற்கு ஜி7, அமரிக்கா தயாராக உள்ளன. மோடி மீதான பொறாமை காரணமாக அவர்கள் செய்கிறார்களா? என்றால் அப்படி இல்லை. பிரதமர் மோடி இந்தியாவை வளர்ப்பதற்கு பதிலாக குஜராத்திகளை வளர்ப்பதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். பல ஒப்பந்தங்களை அவர்களுக்கு எடுத்துக்கொடுக்கிறபோது சர்வதேச நாடுகள், குஜராத்திகளை வைத்தே மோடிக்கு செக் வைக்கிறார்கள்.
மோடிக்கும், ஆர்எஸ்எஸ்க்கும் இடையிலான மோதல் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலிலே அவருக்கு சீட் தரக்கூடாது என்று நினைத்திருந்தார்கள். தேர்தலுக்கு பிறகு சிலரை பிடித்து தனது 75 வயது வரை பொறுப்பில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னதாகவும், அதன் பிறகு அவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள் என்று சொன்னார்கள். ராமர் கோவில் விவகாரத்தில் மோதல் நடைபெற்றது. மோகன் பகவத்தை ஒழித்துக்கட்டுவதற்கு முயற்சித்தார்கள். பின்னர் ஆர்எஸ்எஸ் மிரட்டி மோடியை பணியவைத்து, ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்தது அங்கு எச்சரிக்கை விடுத்தது ஆகியவற்றை நான்தான் முதன் முதலில் வெளிப்படுத்தினன். ஆனால் மோடி பிரதமர் பதவியில் இருந்து விலக மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அடுத்தக்கட்டமாக மோகன் பவத்தை காலி செய்ய திட்டமிட்டார்கள். அப்படி இருக்கிறபோது தான் போர் என்பது வந்துவிட்டால் எவனும் கேட்க மாட்டார்கள். நாம் ஆட்சியை தொடர்ந்து கொண்டிருக்கலாம் என்று நினைப்பதாக ஒரு தரப்பில் பேசப்படுகிறது.
இந்த அழுத்தம் காரணம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, அமெரிக்காவிடம் சென்று சரணடைந்து விட்டனர். தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்று செல்வாக்கு மிக்க தலைவராக மோடி உள்ளதை அமெரிக்கா மற்றும் ஜி7 நாடுகள் விரும்பவில்லை. அதனால் அவரை கவிழ்ப்பதற்காக சரியான நேரத்தை எதிர்பார்த்து சர்வதேச நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். தற்போது ஆர்எஸ்எஸ் அமெரிக்காவிடம் சென்று மோடியை தூக்க முயற்சிக்கிறார்கள். அது தற்போது தீவிரமடைந்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் மோடியை தூக்க வேண்டும். போர் தொடங்கி விட்டால் நாட்டின் தலைவர்களை மாற்றம் செய்ய மாட்டார்கள். அதை வைத்து ஆட்சியை தொடர்ந்துவிடலாம் எனமோடி நினைத்தார். அதனால் இது நடைபெற்று விடக்கூடாது. மோடியை இந்த வருட இறுதிக்குள் மாற்றிவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் முயற்சித்துக் கொண்டிருந்தபோது, அவர் போரை அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான ஆர்.எஸ்.எஸ், அமெரிக்காவின் உதவியை நாடி, அமெரிக்கன் லாபியை பயன்படுத்தி இந்த போரை நிறுத்தி இருக்கிறார்கள். போரை உடனடியாக நிறுத்திவிட்டார்கள். தான் அறிவிக்காமல், டிரம்ப் போர் நிறுத்தம் அறிவித்ததால் மோடிக்கு சர்வதேச அளவில் பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. பீகார் தேர்தலில் சென்றுகூட எதுவும் பேச முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. அந்த ஆத்திரத்தில் தான் இன்றைக்கு போர் சூழல் அப்படியே தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார். எனவே போரை வைத்து அரசியல் லாபம் பார்க்கலாம் என்று நினைத்தவர்கள் தற்போது மண்ணை கவ்வுகிற நிலைக்கு வந்துவிட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.