Homeசெய்திகள்கட்டுரைஎடப்பாடி செய்றது தப்பு! அமித்ஷாவின் அடுத்த பஞ்சாயத்து! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

எடப்பாடி செய்றது தப்பு! அமித்ஷாவின் அடுத்த பஞ்சாயத்து! உடைத்துப் பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

-

- Advertisement -

ஒன்றுபட்ட அதிமுக உருவாகாத வரை அதிமுக – பாஜக கூட்டணிக்கு பலம் இல்லை என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக – பாஜக கூட்டணி விவகாரம் மற்றும் அதிமுக செயற்குழு கூட்டம் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: – எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை ஆகியோரது  பேச்சுக்கு பதில் சொல்ல வேண்டிய ஒரே நபர் அமித்ஷா தான். அவர்தான் சொல்லியாக வேண்டும். ஏனென்றால் பேச்சு நடத்தியது. மிரட்டியது. உருட்டியது. எல்லாம் அவர்தான். அவர் மவுனமாக இருக்கிறார் என்றால் ஒன்று எடப்பாடி சொன்னது நிஜமாக இருக்க வேண்டும். அல்லது இவரை எப்படி வழிக்கு கொண்டுவருவது என யோசித்துக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் அவர்களுடைய பார்வை எல்லாம் தேசிய தலைவர் தேர்தலில் உள்ளது. அதை எல்லாம் முடித்துவிட்டுதான் இந்த பக்கம் வருவார்கள். எதற்காக இவ்வளவு  அவசரப்பட்டார்கள் என்று நான் நினைக்கிறேன் என்றால், விட்டால் விஜயுடன் போய் கூட்டணி போட்டுவிடுவார் என்பதால்தான். சில விஷயங்களை அவர்களும் கேட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட கூட்டணி முடிவுக்கு வருவது போல போச்சு. விஜய் வெளியில் பேசுவது வேறு. அய்யாநாதன் போன்றவர்கள் வெளியில் வந்து உடைத்து விட்டார்கள். அதிமுகவுடன் பேசிக்கொண்டிருக்கிறார் அது அவருக்கு நல்லதல்ல என்று சொல்கிறேன் கேட்க மறுக்கிறார் என்று சொன்னார். அது உறுதியாகிவிட்டால் பாஜகவுக்கு இடமில்லாமல் போய்விடும். நாங்கள் ஒரு வலுவான அணியை அப்போம், அடுத்து தேசிய ஜனநாயக கூட்டணிதான்   என்று அமித்ஷா டிவிட் போட்டார். அதுவெல்லாம் கனவாகி போயிருக்கும். தற்போதும் கூட அதற்கு சிறிய வாய்ப்பு உள்ளது. அப்படி ஒரு கூட்டணி அமைந்து அதிமுக – விஜய் இணைந்து, அதில் மேலும் சிலர் இணைந்துவிட்டால், பாஜகவுடன் சேர ஆளே இருக்காது. இது நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அமித்ஷா பார்வையில் அவரது வியூகம் ஜெயித்தது. அதிமுகவுக்கு அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

eps

அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பின்னர் இரட்டை இலை சின்னத்தை முடக்கும் திட்டத்திற்கு போக மாட்டார்கள். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது.  அமித்ஷா இந்த விஷயத்தை எப்படி பார்க்கிறார் என்று பார்க்க வேண்டும். குருமூர்த்தியை விட்டு கூட என்ன என்று கேளுங்கள் என சொல்லலாம். இல்லாவிட்டால் வேறு யாரவது ஒரு நபரை வைத்து மிரட்டலாம். அவர்கள் நினைத்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். அதற்குதான் நான் பயம் கலந்த எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்தேன் என்றேன். எடப்பாடியை அமித்ஷா என்ன செய்யப் போகிறார். பாஜக என்ன செய்ய காத்திருக்கிறது. ஆனால்  ரொம்ப வெளிப்படையாக மிரட்டினால் கூட்டணிக்கு நல்லது அல்ல. இப்போது அதிமுக – பாஜக கூட்டணிக்கு போதுமான பலம் இல்லை. ஒன்றுபட்ட அதிமுக உருவாகாத வரை அந்த அணிக்கு பலம் இல்லை.

ஓபிஎஸ்சுடன் இணைவதை தொண்டர்கள் எப்படி ஏற்று கொள்வார்கள்?டிடிவி தினகரன் பதில்

நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது நிச்சயமாக அந்த கட்சிக்கு பலன் அளிக்கும். கடந்த தேர்தலில் அதிமுகவிடம் இருந்து முக்குலத்தோர் ஓட்டுகள் விலகி சென்றுவிட்டனர். தற்போது நம்ம ஆள்  அங்கே தலைவராக இருக்கிறார் என்ற உணர்வோடு பார்த்தார்கள் என்றால், அந்த கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். ஏற்கனவே முக்குலத்தோர் பெருமளவில் அங்கு போகிறார்கள். இது அதிமுகவுக்கு நல்லது அல்ல.  சமுதாய கணக்குகளை பார்த்துதான் நயினாருக்கு கொடுத்திருக்கிறார்கள். அதிமுக தனக்கு பிறகும் 100 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று  ஜெயலலிதா சொன்னதை ஒரு துளியாவது காதில் கேட்டிருந்தால், அதை அமல்படுத்த நினைத்தீர்கள் என்றால் சுயநலத்தை தள்ளிவைத்துவிட்டு பெருந்தன்மையோடு நடந்துகொள்ளுங்கள் என்று எல்லோருக்கும் சொல்லுவேன். பெருந்தன்மையோடு நீங்கள் உட்கார்த்து பேசவில்லை என்றால் இந்த இயக்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறிதான். ஓபிஎஸ் எந்த தியாகத்திற்கும் தயார் என்று இறங்கி வந்தார். டிடிவி தினகரன் அதிமுக ஒன்றிணைவதற்காக 2026 தேர்தலில் நான் போட்டியிடாமல் கூட இருக்கத் தயார் என்றார்.

அதிமுக தொண்டர்களுக்கு எதிர்பார்ப்புகளுக்கு, கேள்விகளுக்கு தெளிவுபடத்த வேண்டிய பொறுப்பு எடப்பாடிக்குதான் உள்ளது. அதற்கு குறைந்தபட்சம் அவர் தன்னுடைய இரண்டாம் கட்ட தலைவர்களை அழைத்து அவர் பேச வேண்டும். மே 2ஆம் தேதி செயற்குழு நடைபெறுகிறது. இந்த கூட்டணியை எதற்காக உருவாக்கினேன் என்று அவர் விளக்க வேண்டும். எந்த சூழலில் அமைந்தது என்று விளக்கிச்சொல்லி அவர்களை சமாதானப்படுத்த வேண்டும். அப்போது அவர்கள் தங்கள் கீழ் உள்ள மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்களிடம் சொல்வார்கள். செயற்குழுவில் தனக்கு வேண்டிய தலைவர்களிடம் மட்டும் மைக்கை கொடுத்து பேச சொன்னார் என்றால், அவர் தலையில் அவரே மண்ணை போட்டுக் கொண்டதாக அர்த்தமாகும்.

எடப்பாடி பழனிசாமி எம்எல்ஏக்கள், செயற்குழு உறுப்பினர்களுக்கு விருந்து வைக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுச்செயலாளர் தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு எதற்கு விருந்து கொடுக்கிறீர்கள். அப்போது உங்கள் பலவீனத்தை நீங்களே அம்பலப்படுத்திக் கொள்கிறீர்கள் அல்லவா? எம்எல்ஏக்கள் எல்லோரும் கோபத்துடன் இருப்பதாகவும் அவர்களுக்கு விருந்துடன் பார்சல் கொடுக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகிறது. இதனை ஏன் செய்தியாக்குகிறீர்கள்.80 சதவீதம் பேர் நல்ல கூட்டணி என்றுதான் நினைக்கிறேன். எஞ்சிய 20 சதவீதம் பேரை சமாதானப்படுத்த வேண்டுமே தவிர வாயை அடைக்கக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ