இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுடன் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை அடுத்து இருநாடுகள் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக ஆய்வாளர் கிருஷ்ணவேல் தெரிவித்துள்ளார்.

இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த போர் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தின் பின்னணி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு குறித்து ஆய்வாளர் கிருஷ்ணவேல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- இந்தியா – பாகிஸ்தான் இடையிலான மோதலில் நமக்கு நேரடி சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. இருந்தபோதும் வேறு வகையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சுமார் 4 முதல் 5 விமான தளங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் கருவிகளுக்கும், சில பணியாளர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாகவே கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.
போர் நடைபெற்றால் நமக்கு நிதி வழங்குவதற்கு ஆள் உள்ளதா?. நமது ஒவ்வொரு ஏவுகணையும் 15 கோடி ரூபாய் வரை செலவாகும். ஆகாஷ் என்பது தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையாகும். ப்ரித்வி என்பது தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையாகும். இதன் பெரிய வெர்ஷன் தான் பிரம்மோஸ் ஏவுகணையாகும். உண்மைகள் தெரியாமல் பேசி பேசி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர். மறுபுறம் வீணான வெறுப்பை பரப்புகின்றனர்.
பாகிஸ்தான் சண்டை என்று வந்தால் மகிழ்ச்சி ஆகிவிடுவார்கள். தங்களிடம் காசே இல்லை என்று சொல்லிக்கொண்டு கடன் வாங்க சென்றுவிடுவார்கள். நாம் யாரிடம் சென்று பணம் கேட்பது. பாகிஸ்தானை பொருத்தவரை இந்தியாவால் தங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது ராணுவத்திற்கு நிதி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள். இதையே தான் இஸ்ரேலும், பாலஸ்தீன போராளிகளால் தங்களுக்கு ஆபத்து. அவர்களை அடக்க வேண்டும் என்று சொல்லி காசு கேட்பார்கள். சண்டை தொடங்கி 5 நாட்களில் ஐ.எம்.எப்-ல் ரூ.8 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளனர்.
அந்த நிதியை கொண்டு பாகிஸ்தான் தீவிரவாதத்தை வளர்க்கிறது என்று இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் நமக்கு ஆதரவாக யாரும் பேசவில்லை. எஸ்-400 என்று வான்பாதுகாப்பு அமைப்பு வைத்துள்ளோம். அது 3 இடங்களில் பொருத்தப்பட்டு விட்டது. இன்னும் 2 இடங்களில் பொருத்தப்படவில்லை. ஒவ்வொரு முறையும் 25 ராக்கெட்டுகளையும் உள்ளே பொருத்த முடியும். அதன் விலை கிட்டத்தட்ட 20 கோடி ரூபாயாகும். அவர்கள் 3 லட்சம் மதிப்பிலான டிரோன்களை அனுப்பி 20 கோடி மதிப்பிலான ஏவுகணைகளை அனுப்பினால், நமக்குதான் சேதமாகும். மக்கள் போரை கொண்டாட்ட மனநிலையில் உள்ளனர்.
தாக்குதலின்போது மின்சாரம், இணையதளம் சேவை துண்டிக்கப்படுகிறது. அதற்கு காரணம் பாகிஸ்தான் ஹேக்கர்கள் மிகவும் வலிமையானவர்கள். எனவே பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள வீடுகளை காலி செய்துவிட்டு செல்கிறார்கள். ஆனால் உள்பகுதியில் உள்ள மக்கள் போரை கொண்டாட்ட மனநிலையில் பார்க்கின்றனர். இது ஆபத்தான போக்கு ஆகும். போரில் யார் வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமில்லை. யாருக்கு சேதம் அதிகம் ஆகிறது என்பதுதான். அப்போது இரு தரப்புக்கும் சேதம் அதிகமாகி கொண்டே போகிறது. பாகிஸ்தான்காரனுக்கு காசு கொடுப்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். நமக்கு யாரும் இல்லை.
இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றுள்ளது. அண்ணாவே சொல்லி இருக்கிறார். நாடு என்ற ஒன்று இருந்தால்தான் திராவிடம் பேச முடியும் என்று. மாநில அளவில் வேறு எந்த முதலமைச்சருக்கும் தோன்றாத விஷயமாகும். கலைஞர் இருக்கும் வரை தன்னை சுற்றியே அரசியலை இயங்க வைத்தார். தற்போது இந்திய அரசியலே அவரை சுற்றி இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையில் மோதல் தொடரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் களத்தில் இறங்கிவிட்டார். கடந்த 48 மணி நேரமாக என்ன நடைபெற்றது என்று டிவீட் செய்துள்ளார். கடந்த 48 மணி நேரமாக தாங்கள் தொடர்ந்து இரு நாட்டு பிரதமர்கள், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டவர்களுடன் பேசினோம். ஒரே மனதாக உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது என்று டிரம்ப் சொல்கிறார். மாலை 5.30 மணிக்கு மேல் சண்டை கிடையாது. டிரம்பும் ட்வீட் போட்டுள்ளார். அந்நாட்டு வெளியுறவு அமைச்சரும் ட்வீட் போட்டுள்ளார். இதன் காரணமாக நம்மை போன்றவர்களுக்கு மகிழ்ச்சி. சங்கிகளுக்கு நாளை முதல் செய்தி இல்லை என்று வருத்தம் ஏற்படும்.
டிரம்ப் பொதுவாக வெளிநாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டார். ஐஎம்எப்பில் சென்று பாகிஸ்தான் 8 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. அடுத்து பணம் கேட்டு நம்மிடம்தான் வருவார்கள். எனவே அவர்களை அழைத்து பேசுவோம் என்று முடிவு செய்துள்ளார். சண்டை நிறுத்தம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. போர் முடிந்துவிட்டாலும், இதை வைத்து பாஜக என்ன என்ன அட்வாண்டேஜ்கள் எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. அடுத்தபடியாக பீகார் தேர்தல் வரப்போகிறது. போரை காரணம் காட்டி பாஜக என்ன எல்லாம் செய்யப் போகிறது என்பதை நாம் கவனமுடன் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.