Homeசெய்திகள்கட்டுரைகற்பனை வளத்தை அதிகரிப்போம் - மாற்றம் முன்னேற்றம் - 12

கற்பனை வளத்தை அதிகரிப்போம் – மாற்றம் முன்னேற்றம் – 12

-

12.கற்பனை வளத்தை அதிகரிப்போம் -என்.கே.மூர்த்தி

”அறிவு கொஞ்சமாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் கூடிய உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம்”தாமஸ் ஆல்வா எடிசன்

இப்பொழுது பிரபலமாக இருக்கும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டு வெறும் ஆறாம் வகுப்பு மட்டுமே படித்தவர். அவருடைய காலத்தில் குதிரை வண்டியில் தான் எல்லோரும் பயணம் செய்வார்கள். அதை மாற்ற வேண்டும் என்று கற்பனை செய்தார். எப்படியாவது குதிரைகளுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து சிந்தித்தார். அந்த கனவு அவரை தூங்கவிட வில்லை. தன்னிடம் இருக்கின்ற பொருட்களை வைத்து மோட்டார் பொருத்திய ரிக்ஷாவை உருவாக்கினார்.

ஃபோர்டு கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஹென்றி ஃபோர்டு

அதன் பின்னர் படிப்படியாக வளர்ந்தார். தொடர்ந்து வி-8 என்ற காரை தயாரிக்க வேண்டும் என்று ஹென்றி ஃபோர்டு முடிவு செய்தார். எட்டு சிலிண்டர்களை ஒன்றாக இணைத்து இன்ஜினை வடிவமைத்து தரும்படி பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். முதலில் அதனை காகிதத்தில் வரைந்தார்கள். ஆனால் எட்டு சிலிண்டர்களை ஒரே தொகுதியாக வடிவமைக்க முடியவில்லை.

எப்படியாவது செய்தாக வேண்டும் என்று ஃபோர்டு பிடிவாதமாக இருந்தார். ஆறுமாதம் கடந்தது. ஆனால் பொறியாளர்களால் முடியவில்லை. ”எனக்கு அதுதான் வேண்டும் வேறு எதையும் வரைந்து என்னை சரிகட்ட முயற்சிக்காதீர்கள்’’ என்று பொறியாளர்களை கேட்டுக் கொண்டார்.

இன்னும் எவ்வளவு காலம் ஆனாலும் வி-8 மாடல் தான் வேண்டும் என்று ஹென்றி ஃபோர்டு உறுதியாக இருந்தார்.

ஒரு வருடம் கடந்தும் பொறியாளர்களால் முடியவில்லை. இன்னும் எவ்வளவு காலம் ஆனாலும் வி-8 மாடல் தான் வேண்டும் என்று ஹென்றி ஃபோர்டு உறுதியாக இருந்தார். அந்த முயற்சி ஒன்றே முக்கால் ஆண்டுகள் கழித்து வெற்றி பெற்றது. ஆச்சரியமான வெற்றியாக உலகம் கொண்டாடியது.

நமது ஆழ்மனம் என்பது வளமான, அழகான பூந்தோட்டம். அதில் என்ன விதை விதைக்கிறோம் என்பது தான் முக்கியம்.

நாம் இப்பொழுது எந்த நிலையில் இருக்கிறோம் என்று வருந்த வேண்டாம். ஹென்றி ஃபோர்டு வெறும் ஆறாம் வகுப்பு தான் படித்தார். அவர்தான் உலகத்திலேயே அதிகமான கார்களை உற்பத்தி செய்தவர்.

நாம் ஒன்றை பெற வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஈடாக நாம் வேறொன்றை கொடுத்தாக வேண்டும். இது தான் நடைமுறை விதி. ஒரு மாதத்தில் பத்து லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்றால் அதற்கு நமது மனதளவில், உடலளவில் உழைப்பை கொடுக்க வேண்டும்.

ஆழ்மனதில் கற்பனை செய்ததை, விதைத்ததை, மனக்காட்சியில் கண்டதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஹென்றி ஃபோர்டு வி-8 காரை தனது கற்பனையில் வடிவமைத்தார். அந்த கார் எப்படி இருக்க வேண்டும். இது எவ்வளவு வேகத்தில் இயங்கும் என்பதை எல்லாம் தனது ஆழ்மனதில் கற்பனை செய்தார். அதுதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார். திரும்பத்திரும்ப மனதில் இருந்ததை பொறியாளர்களிடம் விளக்கினார். அதைத்தான் பொறியாளர்கள் வடிவமைத்தார்கள்.

நாம் சிறிய விதை தான் என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். நாளை மாபெரும் மரமாக வளர்ந்து நிற்போம். அப்போது நாடே புகழும்.

இது தான் வாழ்க்கை. நமது ஆழ்மனம் என்கிற தோட்டத்தில் என்ன விதைக்கிறோமோ அதுதான் விளையும். நாம் சிறிய விதை தான் என்று அலட்சியமாக இருந்துவிட வேண்டாம். நாளை மாபெரும் மரமாக வளர்ந்து நிற்போம். அப்போது நாடே புகழும்.

நம் எல்லோருக்கும் கற்பனை சக்தி இருக்கிறது. நாம் எதை கற்பனை செய்கிறோமோ அது தான் வாழ்க்கையாக அமைகிறது. நமது கற்பனையை எதிர் காலத்தை நோக்கி நகர்த்த வேண்டும்.

நாளை என் வாழ்க்கை இவ்வாறு இருக்க வேண்டும் என்று கற்பனை செய்வோம். அந்த கற்பனை எண்ணம் இடைவிடாமல் ஆழ்மனதில் தொடர வேண்டும். எதிர்காலத்தில் நான் புகழ் பெற்ற மனிதனாவேன் என்று கற்பனை செய்வோம். அந்த புகழ் பெற்ற மனிதராகிய நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் மனதில் காட்சிப்படுத்துவோம்.

எதிர்காலத்தில் சிறந்த தொழிலதிபராக வேண்டும். அந்த தொழில் அதிபராகி என்ன தொழில் செய்கிறோம். அதில் எத்தனை நபர்கள் வேலை செய்கிறார்கள் என்பதை மனதில் காட்சிப்படுத்துவோம்.

எதிர்காலத்தில் சிறந்த தொழிலதிபராக வேண்டும்

கற்பனை செய்வோம். அதை மனதில் திரைப்படம் போல் காட்சிப்படுத்துவோம். அந்த கற்பனை காட்சியில் நாம் எப்பொழுதும் கதாநாயகனாகவே இருப்போம்.

காலையில் எழுந்ததும் கற்பனையை காட்சிப் படுத்துவோம். குளிக்கும்போது, உணவு சாப்பிடும் போது என்று கற்பனையை உடன் பயனிக்கும் தோழனாக வைத்திருப்போம். இந்த தோழன் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவன், உன்னதமானவன். அவனை விடவே கூடாது.                                                                                                                                                            தொடரும்…

 

MUST READ