Homeசெய்திகள்கட்டுரைநிகழ்காலத்தில் வாழ்வோம் - மாற்றம் முன்னேற்றம் - 15

நிகழ்காலத்தில் வாழ்வோம் – மாற்றம் முன்னேற்றம் – 15

-

15. நிகழ்காலத்தில் வாழ்வோம் – என்.கே.மூர்த்தி

”நேரத்தைத் தள்ளிப்போடாதே தாமதித்தால் அபாயமான முடிவு ஏற்படும்”  – தாமஸ் ஆல்வா எடிசன்

இப்பொழுது ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கிறார்கள். பல துறைகளில் சாதனைப் படைத்து வருகின்றனர்.

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று ஒரு குறிப்பிட்ட காலம் வரை பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டி வைத்திருந்தோம். இன்று அந்த நிலை மாறி வருகிறது.

பெண் ஏன் அடிமையானாள்?

இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் தந்தை பெரியார். ”பெண் ஏன் அடிமையானாள்?” என்ற அற்புதமான நூலை எழுதினார். அதேபோல் தமிழ் தென்றல் திரு.வி.க. பெண்ணின் பெருமைகள்” என்ற நூலை எழுதினார். மேலும், பாரதியார், பாரதிதாசன் போன்றவர்களும் பெண்ணின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டனர்.

ஆண்களும், பெண்களும் சமமானவர்கள் அல்ல. ஆண்களை விட பெண்கள் எப்பொழுதும் உயர்வானவர்கள். அவர்களிடம் எதைக்கொடுத்தாலும் பிரம்மாண்டமாக மாற்றிக்காட்டக்கூடியவர்கள் என்றார் நோபல் பரிசு பெற்ற ஆங்கில இலக்கியவாதி சர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்.

அவர் எழுதுகிறார், பெண்ணிடம் ஒரு துளி விந்தைக் கொடுத்தால் அவள் ஒரு உயிருள்ள குழந்தையை கொடுப்பாள். ஒரு வீட்டைக் கொடுத்தால் அழகான இல்லமாக மாற்றிக் கொடுப்பாள். மளிகை சாமான்களை தந்தால் மனத்திருப்தி தரும் உணவை தருவாள். ஒரு புன்னகையை தந்தால் அவள் இதயத்தையே தருவாள். எதை தந்தாலும் அதை பல மடங்கு அபிவிருத்தி செய்து அளிப்பாள் என்கிறார்.

எதை தந்தாலும் அதை பல மடங்கு அபிவிருத்தி செய்து அளிப்பாள்

ஒவ்வொரு மூளையும் பெண் மூளையாகவே கருவில் தொடங்குகிறது. எட்டு வாரம் முடியும் போது ஆணின் கரு முளையில் டெஸ்டோஸ்டிரான் (Testosterone) என்கிற அமிலம் உற்பத்தியாகிறது. அதன் பின்னர் ஆண் மூளை என்று வித்தியாசம் ஏற்படுகிறது. இவை அனைத்தும் ஆணைவிட பெண் இயற்கையிலேயே மேன்மையானவள் என்பதை தெளிவுபடுத்துகிறது.

வாழ்க்கை வெற்றியில் ஆண்களிடம் தடுமாற்றம் ஏற்படுகிறது. பெண்களிடம் முன்னேற்றம் இருக்கிறது. உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் ஆண், பெண் இருபாலருக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது.

இருபதிலிருந்து முப்பது வயதான ஆண்களில் 85 சதவீதம் பேர் 52 வினாடிகளுக்கு ஒரு முறை பாலுணர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதைப்பற்றி பேசுகிறார்கள். பெண்களோ ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே எண்ணுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வினாடிகளுக்கு ஒரு முறை பாலுணர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள்

எதை சிந்திக்கிறார்களோ அது தான் வாழ்க்கையாக மாறுகிறது. ஆண்களின் மனதில் அதிகமாக பதிந்திருப்பது பாலுணர்வு தான். பாலுணர்வு என்கிற மனநிலை மனிதன் நேரடி தொடர்புடையதாக இருக்கிறது. அதனால் அதைப் பற்றி மட்டும் அடிக்கடி பேசுகிறோம், சிந்திக்கிறோம்.

பாலுணர்வு மிகவும் சக்தி வாய்ந்தது. அதிலிருந்து திசை மாற்றம் அடைந்து வேறு துறையைப் பற்றி சிந்திக்க தொடங்கி விட்டால் சிறந்த சாதனையாளராக மாற முடியும்.

பாலியல் தொடர்பான பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு நாம் இன்னொரு குறிக்கோளை தேர்வு செய்ய வேண்டும். ஒரு லட்சியவாதியாக மாற வேண்டும்.

எனக்கு பணம் சம்பாதிப்பதே லட்சியம். இன்று முதல் அதற்கான பணியை தொடங்கி விட்டேன் என்று மனதில் கற்பனை செய்ய வேண்டும்.

நான் தொழிலதிபராக வேண்டும். இப்பொழுதே அதற்கான வேலையை தொடங்கி விட்டேன் என்று சிந்தனையை திசை மாற்றம் செய்ய வேண்டும். நமது எண்ணங்களை ஆழ்மனதில் பதிவு செய்ய வேண்டும்.

நான் நண்பர்களோடு பேசும் போது அடிக்கடி பயன்படுத்தும் சொல்,
நிகழ்காலத்தில் வாழுங்கள் என்பது தான். ஆம் நிகழ்காலத்தில் வாழ்வோம்!

நிகழ்காலத்தில் வாழ்வோம்

நாம் இந்த தேதியில், இந்த நேரத்தில், இந்த நொடியில், இந்த இடத்தில் இருக்கும் போது நமது சிந்தனைகள் மட்டும் கடந்த காலத்தில் இருந்தால் முன்னேற்றம் தராது.

கடந்த காலம் சென்று மறைந்தது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நிகழ்காலமே கண் முன் இருக்கும் உண்மை.

கடந்த காலத்தின் தவறுகள் முடிந்து விட்டது. இறந்த காலத்தில் செய்த தவறுகள் நிகழ்காலத்தில் தொல்லை தரலாம். ஆனால் அது முடிந்து போன ஒன்று. கடந்தது கடந்தது தான்!

நாம் நிகழ்காலத்தில் வாழ்வோம்.
பழைய சுகங்களும், துக்கங்களும் வெறும் நினைவுகள் மட்டுமே. அவற்றை
நிகழ்கால உணர்ச்சிகளாக மறு அவதாரம் எடுக்க வைக்க வேண்டாம்.

நான் பிறந்த கிராமத்தை விட்டு வந்து 30 வருடம் ஆகிறது. அங்கே என் உறவினர்கள், நண்பர்கள் பல பேர் இப்போது உயிரோடு இல்லை. அந்த நினைவுகள் ஒரு சில நிமிடம் என் மனத்திரையில் வந்து போகும். அதையே நினைத்துக் கொண்டு நிகழ்காலத்தை பாழ்படுத்த மாட்டேன்.

பெற்றோர் இறந்த பழைய சோகங்கள், பாலியல் தவறுகள், ஏமாற்றங்கள் இவற்றை நினைத்து உணர்ச்சிவசப்பட்டால், நிகழ்காலத்தில் பிரச்சினைகள் அதிகமாகும்.

கடந்த கால பிரச்சினைகளின் நினைவுகளை நிகழ்காலத்திலும் சுமக்கிறோம்.

கடந்தது, கடந்தது தான்!
கதவை சாத்துவோம்!
இப்பொழுது நிகழ்காலத்திற்கு வந்திருக்கிறோம்!
கதவை திறப்போம்!

தொடரும்…

MUST READ