Homeசெய்திகள்கட்டுரைசமூக வலைதளங்கள்

சமூக வலைதளங்கள்

-

சமூக வலைதளங்கள்

வலைதளங்கள் : தகவல்கள், செய்திகள் மற்றும் பொழுதப்போக்கிற்காக என்று பல சமுக வலைத்தளங்களும் இன்று பெருகியுள்ளது.

அதைப் பொழுதுப்போகிற்காக உபயோகிக்க தொடங்கி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வலைத்தளங்களில் மூழ்கி வருகின்றனர். அப்படி பலரையும் அடிமையாக்கிய சமுக வலைதளங்களை  பற்றி விரிவாக பார்ப்போம்.

மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாக மாறிய சமூக வலைதளம்.

இன்டர்நெட் வழியாக கூகுல், யூடிப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற

சமூக வலைதளங்களினால் பல நன்மைகள் இருந்தாலும், அதைவிட பல மடங்கு தீமைகளும் இருப்பதை பார்க்க முடிகிறது.

அதிலும் What’s app, Facebook, Twitter, Snap chat, You tube, Instagram, Tinder  போன்ற சமூக வலைதளங்கள் இன்று பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் மக்கள் ஸ்மார்ட் போன் பிரியர்களாக மாறிவருகின்றனர்.

வாட்ஸ் அப் (What’s App): வாட்ஸ் அப் (What’s App) என்ற செயலி (APP) ஸ்மார்ட் போன்களில் பிரபலமடைந்துள்ளது. இன்று இனையத்தின் வழியாக செய்திகள், புகைப்படம், வீடியோக்கள், லோக்கேஷன் ஷேர் (Location Share) என அனைத்தையும் வாட்ஸ் அப்-ல் உள்ள தொடர்பு எண்களுடன்   பகிர்ந்துக்கொள்ள முடிகிறது.

ஆனால் இதற்க்கு முன் BLUE TOOTH / SHARE IT  போன்ற செயலிகள் வழியாக புகைப்படம், வீடியோ, பாடல்கள் மட்டுமே அனுப்ப முடிந்தது.

நாம் செல்லும் இடத்தில் ஏதேனும் சிக்கல் ஏற்ப்பட்டால் உறவினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ போனில் பேசி அழைக்கலாம்,

நாம் இருக்கும் இடத்தை சரியாக அனுப்புவதற்காக வாட்ஸ் அப்-ல் LOCATION SHARE வசதி கொண்டு வரப்பட்டது.

இப்படி பயனளிக்கும் வாட்ஸ் அப்பை சில பயனாளர்கள் ஆபாச வீடியோக்கள் பகிர்வது, சட்ட விரோத செயல்களான பண மோசடி போன்றவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். அதிலும் சில கும்பல்கள் போலி தகவல்களை அனுப்பவும் பயன்படுத்துகின்றனர்.

சமூக மாற்றம்: மின்னஞ்சல் முகவரி (Email Id) வைத்திருப்பதேயே பெரிதாக கருதிவந்த நிலையில் , தற்போது  சமூக வலைதளங்களை பயன்படுத்தவதற்காகவே  Google Id ஒன்றை தேர்வு செய்கின்றனர்.

நன்மைகள்: சமூக வலைதளம், அவரவருடைய கருத்தை பதிவிட, பகிற, மற்றும் எளிமையாக பணம் பரிமாற்றம் செய்ய போன்றவற்றில் உதவியாக இருந்து வருகிறது.

பொழுது போக்கிற்க்காக மட்டும், சமுக வலைதங்கள் இல்லை, நமக்கு தேவையான அனைத்தையும் தெரிந்துக்கொள்ளவும் உதவுகிறது.

காவல் உதவி (Kaavalan App):  காவலன் ஆப் என்பது பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக பெண்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயலி. இதன் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

அவசர காலத்திலோ அல்லது பாதுகாப்பற்ற சூழலில் இந்த ”காவல் SOS” மிகவும் உதவியாக உள்ளது.

இந்த செயலியை Play store-ல் இருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும். பதிவிறக்கம் முடிந்த பின் உங்களின் பெயர், முகவரி, மொபைல் எண்ணை குறிப்பிட கேட்கும்.

பின் நமக்கு நெருங்கிய மூன்று உறவினர் எண்ணையோ அல்லது நண்பரின் எண்ணையோ பதிவு செய்யக் கேட்கும்.

ஏனெனில் உங்கள் ஆபத்தான நேரத்தில் இந்த காவலன் SOS – ஐ டச் செய்யும் போது, உங்களின் நிலையை ஒரு வீடியோவாகவும் மற்றும் இருக்கும் இடத்தையும் நீங்கள் பதிவு செய்திருக்கும் நபரின் எண்ணிற்க்கும் மற்றும் காவலரின் எண்ணிற்க்கும் அனுப்பப்படும்.

இதனை அறிந்தவுடன் அந்த ஆபத்தான சூழலில் அவர்களின் உடனடி உதவி கிடைக்கும்.

இது போன்ற நன்மை அளிக்கும் சமுக வளைத்தளம் பயன்படுத்தபவர்கள் குறைவு. ஆனால் வெரும் பொழுதுப்போக்கிற்காக கொண்டு வரப்பட்ட சமுக வலைதளத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை இப்பொழுது எண்ணிலாடங்காத அளவிற்கு உள்ளனர்.

தீமைகள்: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி சில சமூக விரோதிகள் தவறான செயலளிலும் ஈடுபடுகின்றனர். ஆபாசமான புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் வெளியிடுகின்றனர். இதனால் இளம் வயதினரின் மனதில் சலனம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

 

ஏமாற்று வேலைகள்: அதுமட்டுமின்றி சில இளைஞர்கள் பெண்களின் இணைய தொடர்பு ID  மூலம் தொடர்பு கொண்டு நண்பர்களாக பழகி சிறிது நாட்களிலே அவர்களை கொச்சைப்படுத்தி ,மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி அவர்களிடமே பணம் கேட்டு மிரட்டி வருகின்றனர்.

இதுபோன்ற நிகழ்வுகள் இன்று பெருமளவு நடந்து வருகிறது இதனால் பெண்ணின் குடும்பத்தினரும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகி வருகின்றனர்.

அதிகப்பயன்பாட்டின் விளைவு: அலைபேசியில் 24 மணி நேரமும் சமுக வலைதளங்களையே  பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு வெளியில் அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாமல் போகிறது.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கடமைகள் இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் சமுக வலைதளங்களில் மூழ்கி இருப்பது எந்த நன்மையையும் அளிக்க போவதில்லை மாறாக துன்பத்தையே ஏற்படுத்தும்.

எச்சரிக்கை: ”பொய்யான ID (Fake ID) மூலம் தனிநபரின் வங்கி கணக்கின் LOGIN /PIN விவரங்களை HACK செய்து வங்கி இருப்பில் உள்ள பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருடுவது போன்ற செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர்.

சமுக வலைத்தளங்களை உபயோகிப்பது தவறு அல்ல ஆனால் அதில் அடிமையாகமலும் சிக்கிகொள்ளமலும் பயன்படுத்த வேண்டும்.

பாதிப்பினை உணராமல் உபயோகித்தால் தீங்கு நமக்கு மட்டுமே. இதனால் பல தற்கொலைகளும் நிகழ்கின்றன.

இந்த சம்பவங்களுக்கு காரணமாக இருக்கின்ற தனி நபர் மீதோ அல்லது நிறுவனங்கள் மீதோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை.

நாம் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தாலும் காவலர்கள் தெரிவிப்பது எச்சரிக்கையோடு இருங்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நூதன திருடர்களை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக உள்ளது என தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது மட்டுமே இதற்கு தீர்வு.

MUST READ