Homeசெய்திகள்கட்டுரைசீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்... சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி... உண்மையை உடைக்கும்...

சீமானுக்காக சமாதானம் பேச வந்த தொழிலதிபர்… சட்ட ரீதியான நடவடிக்கையில் வருண் உறுதி… உண்மையை உடைக்கும் பத்திரிகையாளர் சுபேர்!

-

- Advertisement -

நாம் தமிழர் கட்சியினரின் தரம் தாழ்ந்த அவதூறுகள் காரணமாக வருண்குமார் ஐபிஎஸ் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவர் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை உயர் அதிகாரி வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இடையிலான மோதலின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் சுபேர், பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:- அரசியல்வாதி, அதிகாரி இடையிலான மோதல் என்பது கொஞ்ச நாட்களிலேயே முடிந்து விடும். ஆனால் இவர்களுடைய மோதல் என்பது தொடர் கதையாகி கொண்டிருக்கிறது. டி.ஐ.ஜி-யாக பதவி உயர்வு பெற்ற வருண்குமார் பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அப்போது, சீமான் மேடையில் புலி போல கர்ஜிப்பதாகவும், ஆனால் மேடைக்கு கீழே எலி போல பம்முகிறார் என்றும் வருண் குமார் தெரிவித்துள்ளார். தன்னிடம் சமாதானம் பேசுவதற்காக பிரபல தொழில்அதிபரை சீமான் தூதுவிட்டதாகவும், சமதானம் பேச சன்கிளாஸ் போட்ட காரில் தான் வருவதாகவும் தெரிவித்ததாகவும், ஆனால் நான் சீமானை சந்திக்க மறுத்து விட்டேன் என்றும் வருண்குமார் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் தன்னை குறித்தும், தனது குடும்பம், மனைவி குறித்தும் மிகவும் கீழ்த்தரமாக பேசியதாகவும், இதனால் மிகுந்த மன உலைச்சலுக்கு ஆளாகி விட்டேன் என்றும் வருண்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் குறித்த வீடியோக்கள் இன்னும் இணையத்தில் நீக்கப்படாமல் உள்ளதாகவும் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சியினரின் அவதூறுகள் காரணமாக தனது மனைவி, பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் வருண்குமார் உறுபட தெரிவித்துள்ளார்.

தான் பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி ஆக பணியாற்றி உள்ளதாகவும், அனைத்து அரசியல் கட்சியினருடனும் நெருக்கமாகவே இருந்துள்ளதாகவும், ஆனால் சீமான் விவகாரத்தில் சட்ட ரீதியான முறையில் தான் நடவடிக்கை எடுப்பேன் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் தனிப்பட்ட முறையில் கனடா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து போலியான சமுக வலைதள கணக்கில் இருந்து தன் மீது அவதூறு பரப்பியதாகவும், அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு விட்டனர். இது தொடர்பான விவரங்களை 3 பென் டிரைவுகளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என்றும் கூறுகிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக சீமான் தரப்பிலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் வருண்குமார் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும சீமான் தரப்பில், கட்சி ஆதரவாளர்கள் யார் வேண்டுமானாலும் பேசலாம். அதற்கு நாம் தமிழர் கட்சி பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உயர் பதவியில் இருக்கும் ஒரு அதிகாரிக்கும், ஒரு கட்சிக்கும் இதுபோன்ற மோதல் இருப்பது இரு தரப்புக்குமே ஆரோக்கியமான விஷயம் அல்ல. வருண்குமார், இந்த விவகாரத்தை கடந்து செல்ல வேண்டும். ஆனால் வருண் குமார் அந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். சீமான் விவகாரத்தில் தன்னுடைய மனைவி, குழந்தைகள், தன் பெற்றோர்கள் என்ன தவறு செய்தனர் என கேள்வி எழுப்புகிறார். இன்றும் தங்களை குறித்த அவதூறு வீடியோக்கள் இணையத்தில் அகற்றப்பட வில்லை என்றும் வருண் ஆதங்கம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சீமான் தரப்பு முடிவுக்கு கொண்டுவர நினைக்கிறது. அதனை வருண்குமார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஆனால் அந்த தொழிலதிபர் யார் என்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்தும் கருத்து தெரிவிக்கவில்லை.

நாம் தமிழர் கட்சியில் தாங்கள் பேசிய ஆடியோக்களை கசிந்த விவகாரத்தில் வருண் குமாருக்கு தொடர்பு உள்ளதாக சீமான் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கிறது. ஆனால் இதை உளவுத்துறையினர் தான் எடுத்தது என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது. நாம் தமிழர் கட்சியினரே கூட அதனை எடுத்து வெளியிட்டிருக்கலாம் அல்லவா?. சீமான் மீதான அதிருப்தி காரணமாக இன்று அக்கட்சியில் இருந்து கூட்டம் கூட்டமாக நிர்வாகிகள் வெளியேறி வருகின்றனர். இதனால் அவர்கள் வெளியிட்டிருக்கலாம் அல்லவா. திருச்சி சூர்யா நிறைய வீடியோ, ஆடியோக்களை வெளியிடுகிறார். இந்த ஆடியோ அவர் கைகளுக்கு எப்படி சென்றது?. சீமான் குறித்த நிறைய ஆடியோக்கள் வந்து கொண்டிருக்கிறது. அவர் நிர்வாகிகளை திட்டுகிறார், அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார். இதனை அவர்கள் இருவரில் ஒருவர் தான் ரெக்கார்டு செய்ய முடியும். இதனை காவல்துறை ஒட்டுக்கேட்கவில்லை. மாறாக அவர்களே தான் ரெக்கார்டு செய்து வெளியிட்டுள்ளனர். தற்போது சீமான் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனால் நிர்வாகிகளே வெளியிடுகிறார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கட்சியில் இருந்து வெளியேறும் ஆட்கள் தான் அதனை லீக் செய்கின்றனர். இல்லை இவற்றை காவல்துறை வெளியிடுகிறது என்றால் நாம் தமிழர் கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடராலாமே.

 

வருண்குமாரிடம் சமாதானம் பேச முயற்சித்த விவகாரத்தில் சீமான் தரப்பில் இதுவரை எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. நேற்று வள்ளுவர் கோட்டத்தில் அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் நடந்த போராட்டத்தின் போதும் சீமான் இது குறித்தும் விளக்கம் அளிக்கவில்லை. இது தொடர்பாக கண்டிப்பாக அவர் விளக்கம் அளிப்பார். இதற்கு முன்பு தமிழகத்தில் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அது நேரடியாக அரசாங்கத்திற்கும், அதிகாரிக்குமான மோதலாக இருக்கும். நேர்மையான அதிகாரிகளை அரசு பணியிட மாற்றம் செய்யும், அவர் தங்கியிருந்த ஓட்டலில் தாக்குதல் நடத்தியதை எல்லாம் நாம் பார்த்துள்ளோம். ஆனால் வருண் – சீமான் இடையிலான பிரச்சினை என்பது ஒரு கட்சிக்கும், அதிகாரிக்கும் இடையிலான பிரச்சினையாக உள்ளது. இந்த விவகாரத்தை உதாரணமாக கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தொண்டர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். இணையத்தில் அதிகாரிகள் மட்டுமின்றி, சாமானிய மக்களிடமும் கட்சி நிர்வாகிகள் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என அனைத்துக்கட்சிகளும் அறிவுரை வழங்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

MUST READ