spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதூக்கி எறிந்த நீதிபதிகள்! தூக்கத்தை தெலைத்த முர்மு! சூடு பிடிக்கும் ஆட்டம்!

தூக்கி எறிந்த நீதிபதிகள்! தூக்கத்தை தெலைத்த முர்மு! சூடு பிடிக்கும் ஆட்டம்!

-

- Advertisement -

சட்ட மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்த முடிவை உறுதியாக உச்சநீதிமன்றம் மாற்றாது என்று திமுக செய்தித் தொடர்பு செயலாளரும், தி ரைசிங் சன் நாளிதழ் ஆசிரியருமான பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

மாசோதாக்கள் மீது முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் காலக் கெடு நிர்ணயம் செய்துள்ளது குறித்து குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள கேள்வி குறித்து பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:- மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்து, அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக குடியரசுத் தலைவருக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதன் மூலம் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நீர்த்து போக செய்திட முடியாது. அரசியலமைப்பு சட்டத்தின் 143-வது பிரிவை பயன்படுத்தி கேள்வி எழுப்பினால், அதற்கு உச்சநீதிமன்றம் பதில் அளிக்கலாம். அல்லது பதில் அளிக்காமலும் இருக்கலாம். இதற்கு முன்பாக 3 முறை உச்சநீதிமன்றம் பதில் அளிக்காமல் இருந்துள்ளது. 1993ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பினார். ஆனால் அது அரசியல் ரீதியான கேள்வி என்று அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். 1982ஆம் ஆண்டு ஜெயில் சிங் ஒரு கேள்வி எழுப்பினார். இந்தியா பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்ற இந்தியர்களையும், இந்தியாவுக்கு வந்த பாகிஸ்தானியர்களையும் மறு குடியமர்த்துவது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அது தங்களுடைய வரம்புக்குள் வராது என்று அதற்கு உச்சநீதிமன்றம் பதில் அளிக்கவில்லை. இதுவரை 16 முறை 143வது சட்டப்பிரிவை பயன்படுத்தி கேள்வி எழுப்பியுள்ளனர்.

வினேஷ் போகத்தின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது : குடியரசுத் தலைவர் முர்மு

குறிப்பிட்ட சட்டப்பிரிவு தொடர்பான நிகழ்வு ஒன்று இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி, உச்சநீதிமன்றம் முடித்துவைத்த ஒரு விவகாரத்தை அதிகார வர்க்கத்திற்கு ஆதரவாக திருப்பிவிட முயற்சித்தால்  அதற்கு நாங்கள் ஆதரவு தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதாவது முடிவு எடுப்பதற்கு முன்னாள் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் நீங்கள் கேட்கலாம். நீதிமன்றத்தில் ஒரு முறை தீர்வு காணப்பட்டு விட்டால் அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யவோ, மறுஆய்வு செய்யவோ கோரி 143வது சட்டப்பிரிவை பயன்படுத்தக்கூடாது என்று காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. ஒரு முறை தீர்ப்பளித்துவிட்டால் அதில் தலையிட முடியாது.

குடியரசுத் தலைவர் எழுப்பியுள்ள 14 கேள்விகளும் சுற்றி சுற்றி கால நிர்ணயத்தில் தான் வந்து நிற்கிறது. அதை தொடர்ந்து தான் மற்ற கேள்விகள் வருகின்றன. அவர்களின் நோக்கம் எதில் உள்ளது என்றால் 3 மாதம் காலக்கெடு என்று எங்களுக்கு சொல்ல முடியுமா? ஆனால் 3 மாதம் காலக்கெடு என்று சொல்ல வேண்டும் என்பது தான் நாம் வாங்கியுள்ள தீர்ப்பாகும். மத்திய அரசு மறைமுகமாக என்ன நினைக்கிறது என்றால்? உச்சநீதிமன்றத்திடம் இருந்து ஒரு கேள்விவை வாங்கி விட்டால், இந்த 3 மாதம் காலக்கெடு என்பதை தளர்த்திவிடலாம்.  அப்படி தளர்த்திவிட்டால் பழையபடி கோப்புகளை காலவரையின்றி கிடப்பில் போடலாம் என்று நினைக்கிறார்கள். உச்சநீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. ஏனென்றால் நாளை மக்களுக்கு பதில் சொல்லும் கடமை அவர்களுக்கு தான் உள்ளது. நாளைக்கு ஒரு முடிவு எடுக்கிறோம். அது சரியானதோ, அல்லது சரியில்லாததோ. மக்களிடம் செல்ல வேண்டியது முதலமைச்சர் தான்.

ஆளுநர் ரவிக்கு கடிவாளம்.. பல்கலைக்கழகங்களின் வேந்தராகிறார் முதல்வர் ஸ்டாலின்.. உச்சநீதிமன்றம் அதிரடி..

ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கியபோது, ஆளுநர்தான் அரசாங்கத்தின் தலைவர் என்று ஏன் அவரை கைது செய்யவில்லை. அங்கு மட்டும் எப்படி நீங்கள் தள்ளி விடுகிறீர்கள். அப்போது ஆளுநர் என்பது பொறுப்பு கிடையாது. பெயரளவில் அவர்களை உட்கார வைத்துள்ளோம். அப்போது நாம் வாங்கிய கூட்டாட்சி தத்துவத்துக்கு முக்கியத்துவம் எது என்றால், இவர்களுக்கு காலக் கெடு நிர்ணயம் செய்வது தான். அதை உடைக்க வேண்டும் என்பதற்காக தான் குடியரசுத் தலைவர் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்கள். 2016லேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆளுநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்புகிறார். அந்த சுற்றறிக்கையில் அவர்களுக்கு வருகிற மசோதாக்கள் மீது 3 மாதத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்போது மத்திய அமைச்சர் சொன்னால் ஏற்று க்கொள்வீர்கள். அதையே உச்சநீதிமன்றம் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டீர்களா? அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளில் இரண்டே விஷயங்கள் தான் உள்ளன. ஆளுநருக்கோ, குடியரசுத் தலைவருக்கோ உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியுமா? மேலும் 3 மாதங்கள் என்று காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா?

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார்?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்தால், அவர்கள் இருவரும் தான் பதில் சொல்வார்கள். பெரும்பாலும் மறுஆய்வு மனுக்களில் 99.9 சதவீதம் மாற்றங்கள் இருக்காது. அப்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யலாம். அதிலும் பெரும்பாலான வழக்குகளில் நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லியுள்ளதோ அதுதான் இருக்கும். மத்திய அரசுக்கு அதனால் பயம் வந்துவிட்டது. இதில் அவர்களுக்கு என்ன பெரிய லாபம் என்றால்?  143ல் 1-வது சட்டப்பிரிவின் விரிவாக்கம் 145ல் உள்ளது. அதில் குடியரசுத் தலைவர் கேள்வி எழுப்பினால், தேவை ஏற்பட்டால் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றலாம். இங்கு அவர்கள் சொல்லி இருப்பது எதுவும் சட்டத்திற்கு புறம்பானது இல்லை. உச்சநீதிமன்றம் பல நேரங்களில், அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றம் எடுத்த முடிவுகளை மாற்றி உள்ளது. பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று தீர்ப்பளித்ததும்  நீதிமன்றம்தான். சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற ஜனநாயக நாடுகளில், உச்சநீதிமன்றத்திற்குதான் அதிகாரம். ஜனாதிபதியையும் தாண்டிய அதிகாரம் சட்டத்திற்குதான் உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களும் இணைந்து இந்த விவகாரத்தில் சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று சொல்லி உள்ளார். ஏனென்றால் இந்த விவகாரத்தில் தீர்ப்பில் மாற்றம் வர 99 சதவீதம் வாய்ப்புகள் இல்லை. ஆனால் ஒரு சதவீத வாய்ப்பு உள்ளது. அதனால்தான் அனைவரும் சேர்ந்து சட்டப் போராட்டம் நடத்துவோம் என்று சொல்கிறார்கள். பாஜக சுட்டுப்போட்டாலும் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்யாது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் இரும்பை பயன்படுத்தியுள்ளனர். இதை எந்த இடத்திலாவது அவர்கள் பாராட்டி உள்ளனரா?  முதலமைச்சர் எதற்கு  உடனே பதில் அளிக்கிறார். எதற்கு நிதானமாக இருக்கிறார்? என்பது நாட்டு மக்களுக்கே தெரியும். இதற்கு பெயர் பதற்றம் அல்ல பதிலடி. எங்களுடைய பதிலடி உங்களுக்கு பதற்றமாக தெரியும் என்றால் சாட்டையாக விழுந்துகொண்டுதான் இருக்கும்.

மசோதாக்கள் மீது 3 மாதத்திற்குள் முடிவு எடுப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு என்ன பிரச்சினை? அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவுகளுக்கு உட்பட்டு தானே மசோதாக்கள் வரப் போகிறது. அதன் மீது 3 மாதத்திற்குள் முடிவு எடுப்பதற்கு ஏன் உங்களால் முடியாது. 20 சதவீத இஸ்லாமிய மக்களுக்கான முடிவாகிய வக்பு சட்டத்தின் மீது ஒரு மணிக்கு உட்கார்ந்து 1.15க்கு ஒப்புதல் அளிக்கிறீர்கள். அவ்வளவு பெரிய பிரச்சினையில் நீங்கள் சரி என்று முடிவு எடுக்க உங்களுக்கு 15 நிமிடங்கள் போதும். பிறகு எதில் உங்களுக்கு 3 மாதம் தேவைப்படுகிறது. மாநில சுயாட்சி  நாயகன் என்கிற பட்டம் தான் அவர்களுக்கு பிரச்சினையாக உள்ளது. மக்களிடம் நாம் கேட்க வேண்டியது என்ன என்றால் சிஏஏவுக்கு 10 நிமிடங்களில் முடிவு எடுக்கிறீர்கள். 3 வேளாண் சட்டங்களுக்கு, 5 நிமிடத்தில் இரவோடு இரவாக கையெழுத்து போடுகிறார்கள். வக்பு வாரிய சட்டம் 5 நிமிடத்தில் கையெழுத்து போடுகிறீர்கள். இவ்வளவு பெரிய சட்ட ஆலோசனை பெற வேண்டிய  விஷயங்களுக்கு எல்லாம் 10 நிமிடங்களில் செய்ய முடிந்த குடியரசுத் தலைவருக்கு எதற்கு 3 மாதம்?. இதை தான் முதலமைச்சர் சொல்கிறார். இது ஒரு தீய பார்வை என்று. உறுதியாக நான் சொல்கிறேன் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை மாற்றாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ