spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைவிஜயை கையில் எடுத்த ஆர்.எஸ்.எஸ்! முடிவை மாற்றிய காங்கிரஸ்! ஸ்டாலின் எடுத்த அதிரடி திட்டம்!...

விஜயை கையில் எடுத்த ஆர்.எஸ்.எஸ்! முடிவை மாற்றிய காங்கிரஸ்! ஸ்டாலின் எடுத்த அதிரடி திட்டம்! ப்ரியன் நேர்காணல்!

-

- Advertisement -

முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதில் உறுதியாக உள்ளதாகவும், அதேவேளையில் காங்கிரஸ் தொகுதிகள் எண்ணிக்கையில் இறங்கி வந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குழு அமைக்கப்படும் என்றும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.

priyan
priyan

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு விவகாரம் குறித்தும், காங்கிரஸ் – தவெக கூட்டணி சாத்தியமா? என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் பிரியன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- தவெக – காங்கிரஸ் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமடைந்திருப்பதாகவும், தவெக தரப்பில் 70 இடங்கள், துணை முதல்வர் பதவி, 6 அமைச்சர்கள் பதவி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் தவெக கூட்டணிக்கு செல்வது என்பது உறுதியான தகவல் கிடையாது. தவெகவை காண்பித்து திமுகவிடம் அதிக இடங்களையும், அதிகாரத்தில் பங்கு வாங்குவதும் தான் அவர்கள் ஆரம்பித்த விஷயமாகும். விஜய் அரசியலுக்கு வந்தது அவர்களுக்கு கூடுதல் இடங்களை கேட்பதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டது.

we-r-hiring

திமுகவை பிடிக்காத மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, ஜோதிமணி போன்றவர்கள் ஆரம்பித்து வைத்த தீ தான் தற்போது பெரிதாக எரிந்து கொண்டிருக்கிறது. தற்போதைய சூழலில் காங்கிஸ் சட்டமன்ற உறுப்பினர்களும், முக்கிய பிரமுகர்களும் அதிகாரத்தில் பங்கு வேண்டாம். திமுகவிடம் அதிகமான இடங்களை வாங்குங்கள் என்று தான் சொல்கிறார்கள். கனிமொழி எம்.பி., ராகுல்காந்தியை நேரில் சந்தித்து ஆட்சியில் பங்கு என்பது கிடையாது. தனித்து ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காவிட்டால் தாமகவே கூட்டணி ஆட்சி அமையும். அப்போது அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்று தெளிவுபடுத்திவிட்டார்.

அதேவேளையில், காங்கிரஸ் தரப்பில் குறைந்தபட்சம் 35 இடங்களாவது தர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் திமுக தரப்பில் காங்கிரசுக்கு அதிக இடங்களை கொடுத்தால், மற்றவர்களுக்கும் அதிக இடங்கள் தர வேண்டி வரும். அப்போது, தாங்கள் குறைந்த இடங்களில் போட்டியிட வேண்டி வரும். அதனால் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் கிடைக்காமல் கூட்டணி ஆட்சிக்கு போய்விடும். எனவே அது தேவை இல்லை. குறைந்தபட்சம் திமுக 170 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று சொல்லிவிட்டனர்.

இதை கனிமொழி தெளிவுபடுத்திவிட்டார். 25 இடங்கள் என்பதை, 27 இடங்களாக உயர்த்தலாம். தாங்கள் 175 இடங்களில் போட்டியிடுவதற்கு தயார் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு மாணிக்கம் தாகூர் தரப்பு தவெக கூட்டணிக்கு செல்வது போன்றும், விஜயை புகழ்ந்தும் வதந்திகளை தொடர்ந்து பரப்புகிறார்கள். பிரவீன் சக்கரவர்த்தி போன்றவர்கள் ஆர்எஸ்எஸ்-ன் கைக்கூலிகளாக இருப்பார்களோ என்று தோன்றுகிறது. அவர்கள் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை பிரிப்பதற்கான வேலைகளை செய்து வருகின்றனர்.

காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளதா? இல்லையா? என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதனால் தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். திமுக தரப்பில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 27- 30 இடங்கள் தான் தர முடியும். அதை காங்கிரஸ் ஒப்புக்கொண்டால்தான் குழு அமைத்து பேச முடியும். கூட்டணி தலைவர்களுடன் தொகுதிகளை உறுதி செய்துவிட்டால், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது எந்த எந்த தொகுதிகள் என்பதை மட்டும் பேசிக் கொள்ளலாம் என்கிறார்கள்.

திமுகவை பொருத்தவரை இந்த தேர்தல் மிகவும் முக்கியமானது. திமுக வரலாற்றில் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த வரலாறு கிடையாது. அதனால் ஸ்டாலின் மிகவும் மெனக்கெடுகிறார். 6.5 லட்சம் பேரை களத்தில் இறக்கியுள்ளார். நான்கு முனைப் போட்டியில் திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்தாலும் அவர் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. 170 – 175 இடங்களில் திமுக போட்டியிடுவதில்  அவர் உறுதியாக உள்ளார். தங்கள் திட்டங்களால் பயனடைந்தவர்கள், தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று திமுகவினர் சொல்கிறார்கள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - மதச்சார்பின்மை காக்கும் மகத்தான இயக்கம்!

காங்கிரஸ் தரப்பில் சிலர் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தினாலும், ஸ்டாலின் அவர்களை வெளியே அனுப்பும் திட்டத்தில் இல்லை. அவரை பொருத்தவரை காங்கிரஸ், தேமுதிக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார். ஒருவேளை காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகினால் சிறுபான்மையினர் வாக்குகளில் பிளவு ஏற்படும். இஸ்லாமியர்களின் வாக்கு முழுமையாக திமுகவுக்கு வந்துவிடும். அதேவேளையில் விஜய் சிறுபான்மையினர் என்பதால், கிறிஸ்தவர்களின் வாக்குகளில் பாதி விஜய்க்கு போய்விடும். காங்கிரஸ் கூட்டணியில் இல்லாவிட்டால், திமுக பலமான கூட்டணி என்கிற பார்வை இருக்காது.

தவெக தரப்பில் காங்கிரசுக்கு 70 இடங்கள் தருகிறார்கள் என்றால் அது திமுக கூட்டணியை உடைப்பதற்காக தான். அந்த இடங்கள் முழுக்க அதிமுகவுக்கு சாதகமான முடிவு ஆகும். அது தவறான முடிவு. மற்றொன்று காங்கிரசுக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. விஜய் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக கூறிதான் அரசியலுக்கு வந்தார். அவரை பொறுத்தவரை நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்கிறார். அதன் காரணமாகவே அதிமுக, பாஜக உடன் கூட்டணி உறுதியாக வில்லை. அவர் தன்னை குறித்த மிகையான மதிப்பீட்டில் உள்ளதாக தான் எல்லோரும் சொல்கிறார்கள்.

70 தொகுதிகள் என்பது திமுக கூட்டணியில் இருந்து காங்கிரசை இழுப்பதற்கான முயற்சியாக தான் பார்க்கிறேன். காங்கிரஸ் 70 இடங்களை வாங்கலாம். ஆனால் எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுவார்கள்? நடக்க இருக்கும் தேர்தல் ஸ்டாலின் வேண்டுமா? வேண்டாமா? என்று முடிவு எடுக்கும் தேர்தல் என்கிறார்கள். ஸ்டாலின் செய்த மக்கள் நலத் திட்டங்கள் காரணமாக ஸ்டாலின் வேண்டும் என்று சொல்பவர்கள் உள்ளனர். மேலும், ஸ்டாலின் வேண்டாம் என்று சொல்பவர்களின் வாக்குகள் மூன்றாக பிரிகிறது. அதேவேளையில் பாஜக தரப்பில் விஜயை கூட்டணிக்குள் கொண்டுவரவும் முயற்சிகளும் நடைபெற்று கொண்டிருக்கிறது. ஆனால் அதிமுக அதில் ஆர்வம் காட்டவில்லை.

அதிமுக – பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியாக தான் உள்ளது. ஆனால் அது குறித்து பேச்சுக்கள் எழாமல், திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பிரச்சினை பூதாகரமாகி உள்ளது. அதற்கு பாஜக வலதுசாரி ஊடகங்களும், காங்கிரஸ் அதிருப்தியாளர்களும் தான் காரணம். காங்கிரஸ் தலைமை திமுக கூட்டணியை விட வேண்டாம். ஆனால் 10 இடங்களாவது கூடுதலாக தர வேண்டும் என்று சொல்கிறார்கள். கட்சியினரை அப்போது தான் திருப்தி படுத்த முடியும் என்கிறார்கள். அதேநேரம், அவர்கள் தொகுதி எண்ணிக்கையை மாற்றும் வரை திமுக குழு அமைக்காது. இல்லாவிட்டால் திமுக இடங்களை அதிகரிக்க வேண்டும். எனவே இந்த விவகாரம் இழுபறியாக போய் கொண்டிருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ