spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரையார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?

யார் இந்த அஜய் ரஸ்தோகி? பகீர் பின்னணி! அமித்ஷா ஆபரேஷன்! திகார் ஜெயிலுக்கு விஜய்?

-

- Advertisement -

கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி இருப்பதன் மூலம் விஜயின் குடுமி அமித்ஷா கைக்கு சென்றுவிட்டதாகவும், இதன் மூலம் தவெக மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கரூர் கூட்டநெரிசல் சம்பவம் சிபிஐக்கு மாற்றப்பட்டது தொடர்பாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விவரங்களை முழுமையாக படித்து பார்க்கிறபோது, இந்த வழக்கு முழுமையாக சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படவில்லை. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. நீதிபதி அஜய் ரஸ்தோகி, குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பச்சிளம் குழந்தையை கொன்ற வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை குறைப்புக்கு உத்தரவிட்டவர் ஆவர். பின்னர் அந்த தீர்ப்பை நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான 2 நீதிபதிகள் அமர்வு, சட்டவிரோதம் என்று கூறி ரத்து செய்தது.

அப்படிபட்ட நபர்தான் உச்சநீதிமன்றத்தால் விசாரணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் நீதிபதி அஜய் ரஸ்தோகி. கரூர் வழக்கை சிபிஐக்கு மாற்றி, அதற்கான அதிகாரங்களை எல்லாம் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு அளிக்கிறார்கள். அவர் ஐ.ஜி அந்தஸ்தில் உள்ள தமிழர் அல்லாத 2 அதிகாரிகளை தேர்வு செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை கண்காணிக்கவும், வழிகாட்டவும் வேண்டும். அடிப்படையில் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதியிடம் எல்லையற்ற அதிகாரங்களை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

இந்த வழக்கை விசாரிக்க குறிப்பாக நீதிபதி அஜய் ரஸ்தோகியை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன? அடிப்படையில் ஒரு வழக்கை சிபிஐக்கு மாற்றிவிட்டோம் என்றால் சிஆர்பிசியில் விசாரணை அதிகாரியின் விசாரணையில் எவரும் தலையிட முடியாது. தற்போது விசாரணை அதிகாரியாக ஒரு நபரை நியமித்துவிட்டு, அவருக்கு எந்த வித அதிகாரங்களும் வழங்காமல், ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகியிடம் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. விசாரணை குறித்து நீதிபதி ஆய்வு மேற்கொள்ளலாம். ஆதாரங்களை சேகரிப்பதை பார்க்கலாம். இப்படி விசாரிக்கலாம் வழிகாட்டலாம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவரே விசாரணை செய்யலாம்.

அப்போது சிபிஐ விசாரணை என்பது எதற்காக?  கரூர் கூட்டநெரிசலை விசாரிக்க நீதிபதி விசாரணை தான் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உத்தரவு எப்படி சரியாக இருக்க முடியும்? அடிப்படையில் கிரிமினல் விசாரணையை காவல்துறை தான் மேற்கொள்ள முடியும். நீதிபதி மேற்கொள்ள முடியாது. ஆனால் காவல்துறையின் விசாரணை அதிகாரத்தை முழுமையாக எடுத்து ஒரு நீதிபதியிடம் கொடுத்து, விசாரணை நடத்த முடியுமா?

முல்லைப் பெரியாறு அணையின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் – உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ்

கரூர் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை 2 விஷயங்களுக்காக உச்சநீதிமன்றம் குறை சொல்கிறது. அரசியல் கட்சிகளின் கூட்டங்கள்,பேரணிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய மனுவுக்கு, எப்படி எஸ்.ஐ.டி அமைத்தீர்கள். இது குற்ற விவகாரமாகும் என்று சொல்கிறார்கள். மற்றொன்று SOP  கேட்டிருந்தாலும் அதை பொதுநல வழக்காக தான் விசாரித்திருக்க வேண்டும். தலைமை நீதிபதியிடம் கேட்காமல் நீங்கள் எப்படி விசாரிக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள ஆணையில், தமிழக அரசு அமைத்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். ஒரு நபர் ஆணையத்தை ரத்துசெய்யக் கோரி யாரும் மனுத்தாக்கல் செய்யாத போதும், அதனை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். மனுதாரர் தரப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை கேட்கப்பட்ட நிலையில், அதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம் இதனை இடைக்கால உத்தரவு என்று சொல்கிறது. அவர்களின் கோரிக்கையை முழுமையாக ஏற்கப்பட்டுவிட்ட நிலையில், இதில் என்ன இடைக்கால உத்தரவு இருக்கிறது?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது போதும், அரசு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்தது. அவர் துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ஒட்டுமொத்த காவல் துறையினரின் பங்கு என்ன என்பதை துல்லியமாக விசாரித்து, அறிக்கை அளித்தார். அந்த அறிக்கைக்கு பிறகு தான் காவல்துறையினர் செய்த தவறுகள் வெளிவந்தன. எதிர் எகாலத்தில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்காமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கினார். அதை அரசு ஏற்றுக்கொண்டது.

அதேபோல் தற்போது கூட்டநெரிசல் மரணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு கிரிமினல் விசாரணைக்கும், விசாரணை ஆணையத்திற்கும் வேறுபாடு தெரியாதா? மதுரை உயர்நீதிமன்ற வரம்புக்குட்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி எடுத்து விசாரித்த பிறகு என்றும்? மதுரையில் இரு நீதிபதிகள் அமர்வு சிபிஐ விசாரணை தொடர்பாக விசாரித்த பிறகு, நீங்கள் எப்படி எடுக்கலாம் என்றும் கேட்கிறார்கள்.

கரூர் சம்பவம்: விஜய்க்கு கண்டனம்.... சிறப்பு புலனாய்வு குழு அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

இதேபோல் ஆளுநருக்கு எதிராக உத்தரவு வந்தபோது தமிழ்நாடு அரசின் சட்டங்களுக்கு எதிராக நெல்லை மாவட்ட பாஜக தலைவர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசுக்கு கால அவகாசம் கோரிய நிலையில், அதனை வழங்காமல் தடை விதித்தனர். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற போது நீதிபதிகள் இந்த கேள்வியை கேட்கவில்லை. நெல்லையில் உள்ள ஒருவர் மதுரையில் தான் மனுத் தாக்கல் செய்ய முடியும். அவர் எப்படி சென்னையில் மனுத்தாக்கல் செய்தார்?.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமிநாராயணன் அமர்வு மீது உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததா? இன்றைக்கு நீதிபதி செந்தில்குமார் செய்துள்ளார் என்றால், ஏற்கனவே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனும் அதை செய்திருக்கிறார். இருவரையும் தானே கண்டிக்க வேண்டும். தவெக செய்த மற்றொரு தவறு விஜயை பிடித்து அமித்ஷாவிடம் கொடுத்து விட்டது. சிபிஐ அமித்ஷா – மோடி கைகளில் இருக்கிறது. கரூர் விவகாரத்தில் ஆதாரங்களை சேகரித்துக்கொண்டு விஜயிடம் நான் சொல்வதை கேட்கிறீர்களா? இல்லை திகார் சிறையில் அடைக்கட்டுமா? என்று கேட்பார்கள். அவர்களின் குடுமியை அவர்களே கொண்டுபோய் அமித்ஷாவிடம் கொடுத்துவிட்டார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ