spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆன்மீகம்12 ராசிகளுக்கான வார பலன்கள்

12 ராசிகளுக்கான வார பலன்கள்

-

- Advertisement -

டிசம்பர் மாதம் 19.12.2022 முதல் 25.12.2022 வரை உள்ள 12 ராசிகளுக்கான வார பலன்கள் .

மேஷம் :

we-r-hiring

திறமையால் பாராட்டு பெறும் மேஷ ராசி அன்பர்களே! புதன் மற்றும் வியாழக்கிழமையில் சந்திராஷ்டமம் உள்ளதால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணிச்சுமை அதிகரிக்கும். ‘பிறகு செய்யலாம்’ என்று தள்ளிவைத்த பணி ஒன்றை உடனே செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும். சொந்தத்தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும். கூட்டுத்தொழிலில் போதிய வருமானம் கிடைக்கும். பங்குச்சந்தையில் அதிக லாபம் கிடைக்க கொஞ்ச காலம் பொறுத்திருங்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளில் சுறுசுறுப்பாக ஈடுபடுவர். புதிய வாய்ப்புகள் பெற சகக்கலைஞரின் ஒத்துழைப்பையும், உதவியையும் பெற முற்படுவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். திட்டமிட்ட சுபகாரியங்கள் நடந்தேறும்.

பரிகாரம்:- பெருமாளுக்கு புதன்கிழமை துளசி மாலை சூட்டி வழிபாடு செய்வது துன்பங்களை விலக்கும்.

 

ரிஷபம்:

உறுதி படைத்த உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! சிறுசிறு தடங்கல்கள் இருந்தாலும், உங்கள் சாமர்த்தியத்தால் அதனை வென்று விடுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வும், விரும்பிய இடத்திற்கு மாறுதலும் வந்துசேரலாம். சொந்தத்தொழில், நல்ல வருமானம் தருவதாக அமையும். அவசரப்பணிகளில் ஓய்வின்றி ஈடுபடு வீர்கள். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபார முன்னேற்றம் குறித்து கூட்டாளிகளுடன் ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் ஓரளவு லாபம் தரும். பழைய பங்குகளை விற்பதில் அவசரம் வேண்டாம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று, பணிகளில் மகிழ்ச்சியாக ஈடுபடுவர். வருமானமும், புகழும் அதிகரிக்கும். குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகளும் இருக்கும். பெண்கள் திறமையால் பழைய பகை மறையும்.

பரிகாரம்:- விநாயகருக்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலை சூட்டி வழிபட்டால் நன்மைகள் வந்துசேரும்.

 

மிதுனம் :

நண்பர்களிடம் பாசத்தோடு பழகும் மிதுன ராசி அன்பர்களே! திட்டமிட்ட காரியங்களில் தீவிர முயற்சியுடன் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, விரும்பிய இடமாற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். அலுவலகத்தில் உள்ளவர்கள் பற்றி வீண் பேச்சுகளில் ஈடுபட்டால், உயரதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும், அவர்களால் அதிக வருமானமும் கிடைக்கக்கூடும். கூட்டுத்தொழிலில் லாபம் பெறுவீர்கள். பங்குச்சந்தையில் புதிய முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வருமானம் கூடும். என்றாலும் பொருள் வரவை கவனமாக பயன்படுத்துவதே புத்திசாலித்தனம். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் காணப்பட்டாலும், பெண்கள் சாமர்த்தியமாக அதை சமாளிப்பார்கள். தாய்வழி உறவில் எதிர்பாராத பணவரவு வந்துசேரலாம்.

பரிகாரம்:- வெள்ளிக்கிழமை துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமிட்டு வழிபட்டால் இன்ப வாழ்வு உண்டாகும்.

 

கடகம் :

சத்தியத்திற்கு கட்டுப்பட்டு வாழும் கடக ராசி அன்பர்களே! உற்சாகத்தோடு பணிகளில் ஈடுபட்டு, பல காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்கள், அவசர வேலை ஒன்றை சிறப்பாகச் செய்து, உயரதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சொந்தத்தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர்களின் பணியை விரைந்து முடிக்க, ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் வியாபாரம் நன்கு நடைபெறும். வியாபார அபிவிருத்திக்காக கூட்டாளிகளுடன் கலந்து ஆலோசிப்பீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்கள், முன்னேற்றமான பாதையில் அடியெடுத்து வைப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதாரத்தை உயர்த்தும். குடும்பத்தில் முன்னேற்றம் காணப்படும். சுபகாரியங்கள் நடைபெற தீவிர முயற்சி மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு திட்டமிட்ட செயல்களில் நல்ல திருப்பம் உண்டாகும். இல்லற சேமிப்பு பெருகும்.

பரிகாரம்:- துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு வணங்கினால் காரியம் நிறைவேறும்.

 

சிம்மம் :

சிந்தித்து முடிவெடுக்கும் சிம்ம ராசி அன்பர்களே! அவசியமான காரியங்களை அதிக முயற்சியோடு செய்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு. சிலருக்குப் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். சொந்தத்தொழில் ஏற்றம் தருவதாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் பொருளாதார உயர்வு காணப்படும். கூட்டுத்தொழிலில் சுமாரான லாபம் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகி, மகிழ்ச்சிப்படுத்தும். பங்குச்சந்தை வியாபாரத்தில் லாபம் குறையாது. கலைஞர்கள், புதிய வாய்ப்புகளில் மகிழ்வோடு பணியாற்றுவர். வருமானம் அதிகரிக்கும். சகக்கலைஞர் ஒருவருக்கு, அவரின் உதவியைப் பாராட்டி பரிசளிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு மனவேறுபாடுகள் வந்துபோகும். கடன்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். சுபகாரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும்.

பரிகாரம்:- தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நற்பலன்களைத் தரும்.

 

கன்னி :

கடினமான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே! தேவையற்ற பிரச்சினைகள் தேடி வரும். வழக்கமான பொறுமையால் அதை சமாளிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். சக ஊழியர்களுடன் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. சொந்தத் தொழில் லாபம் தருவதாக இருக்கும். கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெறும். எதிர்பார்க்கும் லாபம் குறையாது. பணத்தை கையாளும்போது அதிக கவனம் தேவை. புதிய பங்குகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். கலைத்துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்புகளால் உற்சாகமாக செயல்படுவார்கள். சகக்கலைஞர்கள் உங்கள் பணிகளில் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையும். சுபகாரியங்களைத் தள்ளி வைப்பது நல்லது. விலகிய சொந்தங்கள் தேடி வரும்.

பரிகாரம்:- சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.

 

துலாம் :

பிறருக்கு உதவும் குணம் கொண்ட துலா ராசி அன்பர்களே! நண்பர்களின் உதவியுடன் முன்னேற்றம் காணும் வாரம் இது. உத்தியோகஸ்தர்கள், பணியில் கவனமாக இல்லாவிட்டால், மேலதிகாரிகளின் கோபப்பார்வைக்கு இலக்காக நேரிடும். வேலைப்பளு அதிகரிப்பதால் ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். சொந்தத் தொழிலில் போதிய வருமானம் இருக்கும். வாடிக்கையாளரின் ரசனைக்கு ஏற்ப வேலைகளை முடித்துக் கொடுத்து பாராட்டுப் பெறுவீர்கள். கூட்டுத்தொழிலில் லாபம் இல்லாவிட்டாலும், வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பங்குச்சந்தையில் ஆதாயம் கிடைக்காது. கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து, பணிகளில் கறுசுறுப்பாக ஈடுபடுவர். சகக் கலைஞர்களின் ஆதரவு இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய பாதிப்பு வராது. உடன்பிறப்பால் சிறு மனக் கலக்கம் உண்டாகும். உறவினர் வருகையால் செலவு உண்டு.

பரிகாரம்:- முருகப்பெருமானுக்கு செவ்வாய்க்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும்.

 

விருச்சகம் :

எச்சரிக்கை உணர்வோடு செயல்படும் விருச்சிக ராசி அன்பர்களே! செய்யும் காரியங்களில் சிறு சிறு தொல்லைகள் ஏற்படலாம். அவற்றை உங்கள் திறமையால் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணிகளில் கவனமாக இருந்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகக் கடன் கிடைக்கும். சொந்தத்தொழில் சிறப்பாக நடைபெறும். பணவரவு கூடும். அவசரமான பணி ஒன்றை முடிக்க தீவிரமாக செயலாற்றுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி பணிகளில் மகிழ்வாக ஈடுபடுவீர்கள். சகக்கலைஞர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பம் சீராக நடைபெற்றாலும், சிறிய குழப்பங்களும் வந்துபோகும். பிள்ளைகளின் மேற்படிப்புக்காக செலவிடுவீர்கள். கடிதம் மூலம் முக்கிய தகவல் வரும். பெண்களுக்கு நெருங்கிய சொந்தங்களினால், சிறு மனக்கசப்பு ஏற்பட்டு விலகும்.

பரிகாரம்:- ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெற்றிலை மாலை சூட்டி வழிபட்டால் துன்பங்கள் அகலும்.

 

தனுசு :

கவலைகளை மறந்து புன்னகையுடன் செயல்படும் தனுசு ராசி அன்பர்களே! உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் தென்பட்டாலும், தடை, தாமதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. உத்தியோகஸ்தர்கள், தங்கள் பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். சொந்தத்தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கலாம். புதிய நபர்களின் அறிமுகம் பலன் தரும். கூட்டுத்தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. பங்குச்சந்தையில், பங்குகளை அவசரப்பட்டு விற்க வேண்டாம். கலைஞர்களுக்கு எதிர்பார்க்கும் ஆதாயம் இருக்காது. புதிய வாய்ப்புகள் பெற சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். பெண்களுக்கு எதிர்பார்த்த சுபகாரியங்கள் தள்ளிப்போகலாம். சொத்துக்கள் வாங்குவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். இடமாற்றங்களில் நிதானப் போக்கு அவசியம்.

பரிகாரம்:- குரு பகவானுக்கு வியாழக்கிழமை நெய் தீபமிட்டு வணங்கினால் வாழ்வு வளமாகும்.

 

மகரம் :

அஞ்சாத நெஞ்சம் கொண்ட மகர ராசி அன்பர்களே! வெள்ளிக்கிழமை பகல் 11.19 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிர்பார்த்த பணவரவு தாமதமாகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சிலருக்கு, வெளியூர் மாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கலாம். உயரதிகாரிகளின் விருப்பப்படி அவசர பணி ஒன்றை செய்து பாராட்டு பெறுவீர்கள். சொந்தத் தொழில் நன்றாக நடைபெறும். புதிய வாடிக்கையாளர் சேர்க்கை உண்டு. கூட்டுத்தொழிலில் வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும். பங்குச்சந்தை வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்காது. கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் புதிய வாய்ப்புகளைப் பெற சிறிது காலம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம். குடும்பம் சீராக நடைபெறும். கணவன்-மனைவி ஒற்றுமை காணப்படும். பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு தோன்றி மறையும். பிள்ளைகளின் கல்விக்கு செலவிடுவீர்கள்.

பரிகாரம்:- சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை நெய் தீபமிட்டு வழிபட்டால் ஒளி வீசும் வாழ்வு கிட்டும்.

 

கும்பம் :

கலை நுணுக்கத்தோடு செயல்படும் கும்ப ராசி அன்பர்களே! வெள்ளிக்கிழமை பகல் 11.20 மணி முதல் ஞாயிறுக்கிழமை இரவு 7.13 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால், எதிலும் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள், தங்கள் பணிகளில் கவனமாக இல்லாவிட்டால் உயரதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்தத்தொழிலில், ஒவ்வொரு பணியும் அவசரப்படுத்தும். அதனால் ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டுத்தொழிலில் வழக்கமான லாபம் வந்துசேரும். பங்குச்சந்தை வியாபாரம் சுமாராக நடைபெறும். கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வருமானம் குறையும். கடினமான பணிகளில் ஈடுபட்டு பிரச்சினைகளை சமாளிக்கும்படி நேரலாம். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பெண்களே சாமர்த்தியமாகச் சமாளித்து விடுவார்கள். கடன் தொல்லைகள் இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.

பரிகாரம்:- திங்கட்கிழமை சிவன் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றினால், பிரச்சினைகள் எளிதில் தீரும்.

 

மீனம் :

கலைநயத்தோடு காரியங்களைச் செய்யும் மீன ராசி அன்பர்களே! ஞாயிற்றுக்கிழமை இரவு 7.14 மணி முதல் செவ்வாய்க்கிழமை வரை சந்திராஷ்டமம் உள்ளதால், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்தபடி பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் ஏற்படும். கடன் தொகை கைக்கு வந்துசேரும். சொந்தத்தொழிலில் போதிய லாபம் கிடைக்கும். கூட்டுத்தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று, எதிர்பார்க்கும் லாபத்தைப் பெறுவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி, அதிக லாபம் கிடைக்கப்பெறும். கலைஞர்கள், பிரபல நிறுவனங்களிடம் இருந்து புதிய ஒப்பந்தங்கள் பெற்று, பொருளாதார ரீதியாக உயர்நிலையை அடைவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்க்கும் முக்கிய சுபச்செய்தி வந்துசேரும்.

பரிகாரம்:- புதன்கிழமை நவக்கிரக சன்னிதியில் புத பகவானுக்கு நெய் தீபமிட்டு வணங்கினால் நன்மை நடைபெறும்.

MUST READ