Homeசெய்திகள்ஆவடிஆவடியில் செல்போனால் உயிரிழந்த மத்தியரசு ஊழியர்... Central Govt. employee electrocuted using...

ஆவடியில் செல்போனால் உயிரிழந்த மத்தியரசு ஊழியர்… Central Govt. employee electrocuted using mobile phone and died at Avadi…

-

சென்னை அடுத்த ஆவடியில் மத்தியரசு ஊழியர் செல்போனை சார்ஜரில் போட்ட படியே பேசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஆவடி கௌரிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி வயது 59. இவர் ஆவடியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சி.வி.ஆர்.டி.இ தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

கௌரிப்பேட்டையை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் பால்பாண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜே.பி.எஸ்டேட் பகுதியில் ஒரு பழைய வீட்டை வாங்கி உள்ளார். அந்த வீட்டில் மறு சிறு அமைப்பு பணிகள் செய்து வந்துள்ளார். சனி ஞாயிறு அன்று வேலையாட்கள் வராத காரணத்தினால் பால்பாண்டி தனியாக வர்ணம் பூசி வந்துள்ளார்.

அப்போது தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு குளிக்க சென்றுள்ளார். குளித்துவிட்டு வந்து சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சார்ஜர் ஒயரில் இருந்து மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்து போனார்.

மேலும் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இது குறித்து வீட்டில் அருகே உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்து கிடந்த உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பழைய வீட்டிற்கு வர்ணம் பூசும்போது மின்சாரம் பாய்ந்து மத்திய அரசு ஊழியர் பலியானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ