spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிதிருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

திருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

-

- Advertisement -

திருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

திருமுல்லைவாயலில் கோடை வெயிலை தணிக்க இளநீர் நீர் மோர் குளிர்பானங்களை பொது மக்களுக்கு வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

we-r-hiring

கோடை வெயிலை முன்னிட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர் மோர் பந்தல் ஆங்காங்கே திறந்து வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் ஆவடி மாநகர கிழக்கு பகுதி திமுக சார்பில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் திருமுல்லைவாயல் பேருந்து நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் சா.மு.நாசர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இளநீர், மோர், குளிர்பானங்கள், வெள்ளரி  வழங்கினர்.

திருமுல்லைவாயலில் நீர் மோர் பந்தல் திறந்து வைத்தார் சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர்

இதேபோல் திருமுல்லைவாயல் பச்சையம்மன் கோவில் அருகில் ஏற்பாடு செய்யபட்டிருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்து இங்குள்ள பொது மக்களுக்கும் இளநீர், மோர், குளிர்பானங்கள், வெள்ளரி போன்றவற்றை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், கிழக்கு பகுதி செயலாளர் பேபி சேகர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ