spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!

பூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!

-

- Advertisement -

நசரத்பேட்டையில் சூட்கேசில் கஞ்சா கடத்தி வந்த நபர் கைது 21 கிலோ கஞ்சா பறிமுதல்.

பூந்தமல்லியில் சூட்கேசில் 21 கிலோ கஞ்சா கடத்தல்!பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீசார் நசரத்பேட்டை சோதனைச் சாவடி அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக சூட்கேசுடன் வந்த நபரை மடக்கி சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

we-r-hiring

இதையடுத்து அந்த நபரை கைது செய்து விசாரித்த போது பிடிபட்ட நபர் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த அல்ஜியா(37), என்பதும் ஒடிசா மாநிலத்தில் இருந்து விற்பனைக்காக கஞ்சாவை எடுத்து வந்தது தெரியவந்தது அவரிடம் இருந்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் போலீசாரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக சூட்கேசில் கஞ்சா பொட்டலங்களை வைத்து அதற்கு மேல் துணிகளை வைத்து துணிகள் எடுத்து வருவது போல் கஞ்சாவை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

MUST READ