பெண் டாக்டர் திருமணம் ஆன ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் டாக்டர் கணவனை தட்டி தூக்கி போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் முகமது யூனிஸ் தன்னுடைய மகள் ஹாரூல் சமீராவை அதே பகுதியில் வசித்து வந்த டாக்டர் அசாருதீன் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், சென்னை தர மணியில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் அசாருதீனும் அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டே முதுகலை மருத்துவம் படித்து வந்த ஹாரூல் சமீராவும் முகப்பேர் மேற்கு ரெட்டிபாளையம் ஜஸ்வந்த் நகரில் உள்ள ஜெயின் சுருதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் ஹாருல் சமீரா வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிர் இழந்துள்ளார். மகள் சமீரா மரணத்தில் சந்தேகம் அடைந்த தந்தை யூனிஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் திருமணம் முடிந்து ஓராண்டு நிறைவு பெறாத நிலையில், மனைவி தற்கொலை செய்து கொண்டதால் RDO விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில் டாக்டர் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சமீராவை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளது நிரூபணம் ஆனதால் காவல்துறையினர் அசாருதீன் மற்றும் அவரது தாய் தந்தை ஆகியோரை கைது செய்தனர்.
கைதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். ஜாமீன் மனு விசாரணையில் தாய் மற்றும் தந்தைக்கு ஜாமீன் கிடைத்து, மகன் அசாருதீனுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. இதன் காரணமாக இன்று அதிகாலை அம்பத்தூர் தொழில்பேட்டை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். அசாருதீன் கைது குறித்து சமீராவின் தந்தை கூறுகையில், காதலித்து திருமணம் செய்ததால் 30 சவரன் நகை கொடுத்து திருமணம் செய்து வைத்தேன். திருமணம் நடைபெற்ற மறுநாளில் இருந்தே அசாருதீன் அவரது தாய் மற்றும் தந்தை மூவரும் கூடுதலாக நகை மற்றும் வில்லா கேட்டு என் மகளை கொடுமை செய்ய ஆரம்பித்தனர். நாளடைவில் கொடுமையானது அதிகரித்து மகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் கொண்டு வந்து வைத்துள்ளது என கூறினார். திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதாவது தந்தை மற்றும் தாயாக இருவரும் ஜாமீன் பெற்றுக் கொண்டனர். தற்கொலை என கூறும் நிலையில், கொலையாக இருக்கலாம் எனவும் சந்தேகம் உள்ளது என கூறினார்.
வாட்சப் மூலம் ரூ.24 லட்சம் சுருட்டிய கும்பல்….போலீசாரின் அதிரடி செயல்…



