மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில் கறிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகை மற்றும் ரூ.1.5 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மாங்காடு அருகே மலையம்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் அன்வர் பாஷா/47 இவர் நசரத்பேட்டையில் சிக்கன் மட்டன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கறிக்கடைக்கு சென்றுள்ளார். பின்னர் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு மற்றும் பெட்ரூமில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக உள்ளே சென்று பார்த்த போது அதில் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் தங்க நகை 1.5 லட்சம் பணம் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதை அடுத்து மாங்காடு காவல்துறையினருக்கு தகவல் அளித்தததின் பேரில் சம்பவ இடம் வந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர் மற்றும் மோப்பநாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அன்வர் பாட்ஷா வீட்டின் அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு வீட்டில் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாங்காடு காவல்துறையினர் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீண்டும் தொடங்கிய கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படப்பிடிப்பு!


