spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்நண்பரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய கும்பலால் பரபரப்பு!!

நண்பரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய கும்பலால் பரபரப்பு!!

-

- Advertisement -

நண்பரின் கொலைக்குப் பழிவாங்க நீதிமன்றத்தில் இருந்து பின்தொடர்ந்து வந்து தாக்குதல் மேற்க் கொண்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நண்பரின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய கும்பலால் பரபரப்பு!!சென்னையில் கடந்த 2017-ஆம் ஆண்டு தண்டையார்பேட்டையில் நடந்த ஜீவா என்பவரின் கொலை வழக்கு சென்னை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி லட்சுமணன், விழுப்புரத்தைச் சேர்ந்த கார்த்திக், பிரபாகரன், லோகேஷ், ராக்கி என்ற யுவராஜ், வெங்கட் ஆகியோர் நேற்று ஆஜரானார்கள்.  விசாரணை முடிந்து பாரிமுனை ராஜாஜி சாலை வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பாரிஸ் கார்னர் சிக்னலில் நின்றுள்ளனர். பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம்  தெரியாத 7 பேர் கொண்ட கும்பல், இருசக்கர வாகனங்களில் நின்றிருந்தவர்களின் பின்னால் மோதி வம்பிழுத்தனர். திடீரென மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு ஏழு பேர் கொண்ட கும்பல் அவர்களை வெட்டி கொல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாறி மாறி வெட்டியதில் 2 தரப்பினருக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் எதிர் தரப்பில் கத்தியை பிடுங்கி அவரது முதுகில் வெட்டி உள்ளார். சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பரபரப்பான ராஜாஜி சாலையில் நடந்துள்ளது.

சத்தம் கேட்டு உதவி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் ஓடி வந்து கொலை நடக்காமல் இருதரப்பினரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். காயமடைந்த லட்சுமணன், ராக்கி என்ற யுவராஜ் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இதனையடுத்து கார்த்திக், பிரபாகரன், லோகேஷ், ஆகியோரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவா்களை வெட்டிய கும்பல்  ஆகாஷ், தினேஷ் என்ற தீனா, ஜான்சன், சாந்த குமார், யுவராஜ், ரோலக்ஸ், அத்திப்பட்டு பாய் ஆகியோர் என்பது தெரிய வந்தது. இரண்டு ரவுடி கும்பலையும் சேர்ந்த 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, தப்பி ஓடிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இவர்கள் வந்த 3 பைக்குகள், கத்தி, செல்போன்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

we-r-hiring

கொலைக்கு பழிக்கு பழியாக கொலை செய்ய கும்பல் வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு ஜீவா என்பவர் ரவுடி லட்சுமணன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வடக்கு விரைவு நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும் கொலை செய்தவர்களுக்கு சாதகமாக வழக்கின் போக்குச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அவர்கள் விடுவிக்கப்படலாம் என கருதி ஜீவாவின் கூட்டாளிகள் இந்த கொலைக்கு திட்டமிட்டுள்ளனர் என்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது.

தண்டையார்பேட்டை ஆகாஷ்,  மேல்மலையனூர் பிரபாகரன், கார்த்திக் தண்டையார்பேட்டை லோகேஷ் ஆகிய நான்கு பேரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் தண்டையார்பேட்டை ஆகாஷ் போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்த போது கீழே  விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. ரவுடி கும்பல் மோதிக்கொண்டிருக்கும் போது அதை தடுத்து நிறுத்தி அசம்பாவிதங்கள் நடைபெறாமல் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட வடக்கு கடற்கரை போலீசாரை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

SIR மூலம் 41 தொகுதிகளை குறிவைக்கும் பா.ஜ.க….இந்தியா கூட்டணி எச்சரிக்கை…

MUST READ