ராமேஸ்வரம் சேரன் கோட்டை அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் குத்தி கொன்ற முனிராஜ் என்ற கொலையாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியை சேர்ந்த முனிராஜ் என்ற இளைஞர் அப்பகுதியை சேர்ந்த 12-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவரை ஒருதலைபட்சமாக காதலித்து வந்த நிலையில் தன்னுடைய காதலை ஏற்க மறுத்த நிலையில் அந்தப் பெண் இன்று பள்ளிக்குச் செல்லும் போது சேரன் கோட்டை அருகே முனிராஜ் அந்தப் பெண்ணை மறித்து காதலிக்குமாறு வற்புறுத்தியதாக கூறப்படுகிறது
இதனை மறுத்து அந்த பெண்ணை திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பள்ளி மாணவி பரிதாபமாக உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் கத்தியுடன் நின்ற முனியராஜை கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் சேரங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் உறவினர்கள் தற்போது ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் குவிந்து கூச்சல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் தற்போது அந்த இடத்தில் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. பள்ளியில் படிக்கக்கூடிய மாணவி காதலிக்க மறுத்த சம்பவத்தால் கத்தியால் குத்திய இளைஞரின் வெறி செயல் தற்போது ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தற்போது தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ராமேஸ்வரத்தில் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் நிலவுவதாகவும் காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு


