சங்கராபுரம் அருகே தாய் தந்தையரை இழந்துபோன நான்கு குழந்தைகளை அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற அறிவிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதுள்ள சமூக மதிப்பை மேலும் மேலும் உயர்த்தியிருக்கிறது. அரசாங்கம் என்பது ஒரு நிறுவனமே ஆயினும் அது ஈரமும் இதயமும் அற்ற எந்திரமல்ல ஒரு குடும்பத்திற்கான குணக்கூறுகள் உடையது என்பதற்கு சாட்சி சொல்லும் ஆட்சியாளராக முதல்வர் சிறந்து நிற்கிறார். பால் நினைந்தூட்டும்
தாயினுஞ்சாலப் பரிந்து நிற்கிறார் என வைரமுத்து கூறியுள்ளாா்.
இது குறித்து கவிப்பேரரசு வைரமுத்து தனது வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“காற்றடித்தால்
அவன் வீடாவான்:
கடுமழையில்
அவன் குடையாவான்:|
ஆற்றாதமுதால்
அழுத கண்ணீரை
அங்கே துடைக்கும் கையாவான்”
என்று கண்ணனுக்கு
எழுதிய பாட்டு வரிகள்
முதல்வர் என்ற அண்ணனுக்கும் பொருந்தும்
மக்கள் இந்த அறச்செயலை
மறக்க மாட்டார்கள்:
நெகிழ்ந்து புகழ்ந்து
மகிழ்கிறார்கள்”
தொடரட்டும் நல்லாட்சி என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளாா்.
தாய் தந்தையரை இழந்து பரிதவிக்கும் குழந்தைகளுக்கு அரணாய் நிற்கும் முதல்வர் – வைரமுத்து பாராட்டு
-
- Advertisement -


