அச்சரப்பாக்கம் அருகே போலி மருத்துவராக மருத்துவம் பாா்த்து வந்த அதிமுக ஒன்றிய செயலாளா் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, தேடி வருகின்றனா்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அச்சரப்பாக்கம் அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளராக இருப்பவர் ராஜி என்கின்ற ரங்கராஜன். இவர் கடமலைபுத்தூர் கிராமத்தில் (ரங்கராஜன் கிளினிக்) நடத்தி வருகிறார். இவர் சித்த மருத்துவம் படித்துவிட்டு, அவரிடம் வரும் நோயாளிகளுக்கு ஆங்கில மருந்து மாத்திரைகள் வழங்குதல், நோயாளிகளுக்கு இன்ஜெக்ஷன் செலுத்துதல் போன்ற பல்வேறு செயலில் ஈடுபட்டு வந்தார். அதுமட்டுமல்லாமல் நோயாளிகளுக்கு இவா் கொடுக்கும் மருந்துகள் அதிக வீரியம் (டோஸ்) கொண்ட மருந்து மாத்திரைகள் கொடுப்பதால், நோயாளிகளுக்கு பல்வேறு உபாதிகள் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
சித்த மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக அப்பகுதி மக்கள் சுகாதார இயக்குனர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பெயரில் நேற்று இணை சுகாதார இயக்குனர் மலர்விழி, அவர்கள் தலைமையில் மருத்துவக் குழுவினர் கிளினிக்கை ஆய்வு செய்ய வந்தபோது, அதிமுக நிர்வாகிகளை வைத்து மிரட்டியதால், சுகாதார இயக்குனர் அவர்கள் அச்சரப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதற்கிடையே கிளினிக்கில் இருந்து போலி மருந்துவர் தப்பி தலைமறைவானார். அதன் பேரில் அச்சரப்பாக்கம் காவல்துறையினர் போலி மருத்துவரும் அதிமுக ஒன்றிய கழக செயலாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஒன்றிய செயலாளர் போலி மருத்துவராக அப்பகுதியில் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உழவர்களிடையே பிரதமர் உரையாற்றிய ஈரம் காய்வதற்குள் அடுத்த துரோகத்தை தொடங்கிய பாஜக – முதல்வர் கண்டனம்


