spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிபோதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் - 8-கிலோ கஞ்சா பறிமுதல்

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் – 8-கிலோ கஞ்சா பறிமுதல்

-

- Advertisement -

அம்பத்தூர் பகுதியில் 8-கிலோ கஞ்சா பறிமுதல், அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாரால் குற்றவாளி கைது..

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் - 8-கிலோ கஞ்சா பறிமுதல்

ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் இன்று காலை பட்டரவாக்கம் ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்டு அருகில் கண்காணித்த போது சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

we-r-hiring

 

அதில் பிரகாஷ்.M ஆ/வ 31, த/பெ முருகன், 5வது பிளாக், ஆபிசர் டவுண், முதல் தெரு. ஆணையூர், மதுரை மாவட்டம் என்பதும், மேலும் அவர் ஆந்திரா மாநிலம் விஜயவாடா சென்று கஞ்சா வாங்கி வந்து பட்டரவாக்கம் மற்றும் அம்பத்தூர் பகுதியில் இருக்கும் கட்டிட தொழிலாளிகளுக்கும் வெளிமாநில தொழிலாளிகளுக்கும் விற்பதற்க்காக தெரியவந்தது.

போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கம் - 8-கிலோ கஞ்சா பறிமுதல்

08 கிலோ கஞ்சாவை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பின் குற்றவாளியை புழல் சிறையில் அடைத்தனர்.

MUST READ