Homeசெய்திகள்ஆவடிபாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழா... 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழா… 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

-

அம்பத்தூர் பாடி அருள்மிகு படவட்டம்மன் கோவில் ஆடிமாத திருவிழாவை முன்னிட்டு 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.

padi

அம்பத்தூர் அடுத்த பாடியில் பிரசித்திபெற்ற அருள்மிகு படவட்டம்மன் ஆலயம்
அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத 43ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அறங்காவலர் குழு தலைவர் உமா மோகன் தலைமையில் பாடி சிவன் ஆலயத்தில் இருந்து 1008 பக்தர்கள் பால்குடம் ஏந்தி மேளதாளம் முழங்க ஊர்வலமாக ஓம்சக்தி பராசக்தி என்ற மந்திரம் முழங்கி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தனர்.

padi

தொடர்ந்து, அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். இதனை அடுத்து, பக்தர்கள் அலகு குத்துதல் தீச்சட்டி ஏத்துதல் என தங்கள் நேர்த்திக்கடனை அம்மனுக்கு செலுத்தினர். இதனை கண்ட பொதுமக்கள் பக்தி பரவசம் பொங்க அரோகரா அரோகரா என கோஷம் முழங்கினர். மேலும் கோவிலில் அம்மனை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு சுமார் 2 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

padi

இதனை அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்து உணவு பரிமாறினார். இவ்விழாவில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த LPF மோகன், ஆசை ஆரோக்கியம் மற்றும் ஆலய அறங்காவலர் குழு தலைவர் உமா மோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

MUST READ