spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடிஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

-

- Advertisement -

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது.

ஜெயிலர் பட வில்லனின் அடுத்த படம்….. டைட்டில் இதுதான்!

we-r-hiring

ஆவடியில் பழமை வாய்ந்த புனித அந்தோனியர் திருத்தலத்தில் 74 ஆம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

வண்ண விளக்குகளால் ரம்யமாக காணப்பட்ட ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இந்து முஸ்லிம் என மதம் கடந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை கொண்டாடினர்.

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

ஆவடி செக் போஸ்ட் அருகே புனித அந்தோனியார் திருத்தலம் உள்ளது.பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெரு விழா நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு 74 ஆம் ஆண்டு பெரு விழா ஆலய பங்கு தந்தை லாரன்ஸ் ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் வெகுவிமர்சையாக இன்று துவங்கியது.

ஆவடி புனித அந்தோனியர் திருத்தல 74 ஆம் ஆண்டு பெருவிழா

 

இதற்காக ஆலயம் வண்ண விளக்குகளால் மிக பிரமாண்டமாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக மக்கள் வெள்ளத்தில் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட கொடி ஆலயத்திற்கு முன்பு வைக்கப்பட்டு இருந்த கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.அப்போது வான வேடிக்கையுடன் வண்ண விளக்குகளாலும் ஆலயம் மிகவும் ரம்மயமாக காட்சியளித்தது.இந்த விழாவில் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் இந்து முஸ்லிம் என மதம் கடந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று துவங்கும் இந்த திருவிழா நவபலி, நற்கருணை பவனி,ஆடம்பர தேர்பவனி என மொத்தம் 6 நாட்கள் விழா நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

MUST READ