திருவள்ளூர் எம்.பிக்கள் மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலை கூட எழுப்பவில்லை என பாஜக வேட்பாளர் பாலகணபதி ஆவேசமாக பேசியுள்ளார்.
திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியின் தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டாபிராமில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வேட்பாளருக்கு அதிரடியாக பட்டாசு வெடித்து வரவேற்ற கட்சியினர் பிரம்மாண்ட மலர் மாலை அணிவித்தும் சால்வைகளை அணிவித்து உற்சாகப்படுத்தினர். நிகழ்ச்சி மேடையில் பேசிய தேசிய ஜனநாயக கூட்டணியின் பாஜக வேட்பாளர் பாலகணபதி கூறுகையில்… திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி ஒரு அற்புதமான தொகுதி. தமிழகத்தில் தனி நபர் வருமானம் அதிகமிருக்கக்கூடிய ஒரு பகுதி. ஆனால் இங்கு நடந்து கொண்டிருப்பது என்ன. சரியான வேலை வாய்ப்புகள் முழுமையாக உருவாக்கப்படவில்லை. இந்த பகுதியைச் சுற்றிலும் எத்தனை தொழிற்சாலைகள் துவங்கப்பட்டுள்ளன.
ஆனால் இங்கு இருக்கக்கூடிய பூர்விக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை.. மூன்று போகமும் நெல் விளையக் கூடிய ஒரு பகுதி, மீன்வளம் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி, தொழிற்சாலைகள் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி, கனிம வளம் அதிகமாக இருக்கக்கூடிய பகுதி. இந்த நான்கு வளங்களும் முழுவதுமாக ஒரு தொகுதியில் இருக்கிறது என்று சொன்னால் அது திருவள்ளூர் மட்டுமே. இந்த பாராளுமன்ற தொகுதி எப்படி உருவாக்கியிருக்க வேண்டும். மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால் 15 வருட காலமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருக்கையை தேய்த்தார்களே தவிர மக்களுடைய குரலுக்காக மக்களுடைய வேண்டுதலுக்காக ஒரு குரலைக் கூட எழுப்பவில்லை.
இன்னும் அதிகபட்சமாக கடந்த முறை வென்ற பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு அரசாங்கம் வழங்கிய நிதியை கூட முழுமையாக செலவழிக்கவில்லை மக்களுக்கு கொடுக்க விருப்பமில்லை மனமில்லை. நான் மிட்டா மிராஸ் போன்ற பெரிய குடும்பத்தில் இருந்து வந்தவன் கிடையாது . சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவனாக வந்துள்ளேன். 25 வருட கால அரசியல் வரலாற்றில் ஒரு அப்பழுக்கற்ற 5 பைசாகூட மற்றவரிடம் வாங்காத ஒரு தூய அரசியல்வாதியாக உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஒரே ஒரு வாய்ப்பை வழங்கி தாருங்கள் உங்களோடு கட்டாந்தரையில் அமர்ந்து உறங்க தயாராக இருக்கிறேன் உங்களுடன் ஏரிக்கரையில் பாயை விரித்து உறங்க தயாராக இருக்கிறேன். என்னுடைய ஒரே நோக்கம் திருவள்ளூர் பாராளுமன்றத்தை தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே முதன்மையான பாராளுமன்ற தொகுதியாக மாற்ற வேண்டும் என்பதுதான்.
வரக்கூடிய இருபது நாட்கள் எப்படி ஐயப்பன் கோவிலுக்கு மாலை இட்டு விரதம் இருப்போமா இதே போன்று காலையும் மாலையும் குளித்துவிட்டு பஜனை செய்து அதற்கு பின்னாடி விரதம் இருப்போமோ அதேபோன்று ஒரு தவ வாழ்க்கையை நாம் செய்ய வேண்டும் இந்த 20 நாட்கள் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனக்கு முன்பாக பேசிய தலைவர்கள் பேசியிருந்தார்கள். பாரதிய ஜனதா கட்சி ஒரு மதவாத கட்சி பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி ரீதியான கட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பன்னீர்செல்வம் அடையாளத்தை இழந்து அடையாளத்தை தேடிக்கொண்ட ஒரு கட்சி ஜி கே வாசன் கட்சி எங்கே இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் எள்ளி நகையாடி கொண்டிருக்கிறார்கள் அந்த எள்ளிய நகைக்கெல்லாம் பதிலடி தரக்கூடிய நிச்சயமாக இந்த தொகுதியில் பாராளுமன்றத்தில் தாமரை வெற்றி பெற்றாக வேண்டும் அரசியல் ரீதியாக நம்முடைய திறமையை தமிழக மக்களுக்கு காண்பிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருந்து கொண்டிருப்பதாக என ஆவேசமாக பேசினார்…