Homeசெய்திகள்சென்னைதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வணிக...

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு

-

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில்  இரண்டு புதிய வணிக வளாகங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறப்பு
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் சார்பில் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இரண்டு புதிய வணிக வளாகங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சட்டப்பேரவையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சொந்தமான 18 இடங்களில் உள்ள சிதிலமடைந்த வாடகைக் குடியிருப்புகளை அகற்றி விட்டு புதிய வணிக வளாகம், குடியிருப்புகள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் 3.22 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம் மற்றும் பொன்னப்பன் சந்தில் ரூபாய் 19.4 லட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகம் என மொத்தம் 3.5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இரண்டு வணிக வளாகங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

ஒலிம்பிக் மல்யுத்தம் – இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் வினேஷ் போகத்!

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சென்னை மேயர் பிரியா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

MUST READ