Homeசெய்திகள்சென்னைஐபிஎல், கோடை விடுமுறை- மே மாதத்தில் மெட்ரோ ரயிலில் 72.68 லட்சம் பேர் பயணம்

ஐபிஎல், கோடை விடுமுறை- மே மாதத்தில் மெட்ரோ ரயிலில் 72.68 லட்சம் பேர் பயணம்

-

ஐபிஎல், கோடை விடுமுறை- மே மாதத்தில் மெட்ரோ ரயிலில் 72.68 லட்சம் பேர் பயணம்

சென்னை மெட்ரோ ரயில்களில் நடப்பாண்டில் கடந்த 4 மாதங்களை விட மே மாதத்தில் மட்டும் 5.82 லட்சம் அதிக பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் பொது போக்குவரத்துகளில் முக்கிய பங்காற்றி வருகிறது. நாளொன்றுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணித்துவருகின்றனர். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட மே மாதத்தில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 575 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக மே மாதத்தில் மட்டும் 72 லட்சத்து 68 ஆயிரத்து 7 பேர் பயணித்துள்ளதாகவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில், இதுவே அதிக எண்ணிக்கையில் பயணிகள் பயளித்துள்ளனர் என்றும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63,00,282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69,99,341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66,85,432 பயணிகளும் மற்றும் மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக மே 24 ஆம் தேதி அன்று 2,64,974 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மே மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 26,76,545 பயணிகள், பயண அட்டைகளை (Tiuvel Caad Ticketing System) பயன்படுத்தி 42,18,357 பயணிகள் டோக்கள்களை பயன்படுத்தி 6,748 பயணிகள், குழு பயணச்சீட்டு (Gmmp Ticket) முறையை பயன்படுத்தி 6,218 பயணிகள் மற்றும் சிங்காரா சென்னை அட்டையை (நேசிய பொது இயக்க அட்டைர் பயன்படுத்தி 5,316 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

 

MUST READ