Homeசெய்திகள்சென்னைசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநிலத்தவர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநிலத்தவர் கைது

-

- Advertisement -

அம்பத்தூர் ரயில் நிலைய கழிவறையில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வட மாநில வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது 

பாலியல் தொல்லை,Sexual abuse

 

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சற்று மனநலம் குன்றிய சிறுமி ஒருவர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.இந்த நிலையில் பள்ளி சீருடையில் இருந்த சிறுமி வழி தவறி சென்னை சென்ட்ரலுக்கு சென்றுள்ளார்.

அச்சிறுமியை கண்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த நரேந்திர சிங் /25 என்ற வாலிபர் சென்னை சென்ட்ரலில் இருந்து அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் அழைத்து வந்துள்ளார், சிறுமிக்கு தின் பண்டங்கள் வாங்கிக் கொடுத்து அழைத்து வந்த நரேந்திர சிங் ரயில் நிலையத்தில் உள்ள கழிவறைக்குள் சிருமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட ரயில் பயணிகள் சிலர் பாலியல் தொல்லை கொடுப்பதாக அம்பத்தூர் போலீசுக்கு புகார் கொடுத்தனர்.

Sexual abuse ,பாலியல் தொல்லை

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சிறுமியை மீட்டு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அதில் எண்ணூரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி வழி தவறி சென்ட்ரலில் இருந்ததாகவும், பீகாரை சேர்ந்த நரேந்திர சிங் (25) என்ற வாலிபர் சிறுமியை அம்பத்தூர் ரயில் நிலையம் அழைத்து வந்து அங்கிருந்து கழிவறையில் சில்மிஷம் செய்ததும் தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து நரேந்திர சிங்கை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அம்பத்தூரில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வடமாநில வாலிபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

MUST READ