Homeசெய்திகள்சென்னைமின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவன்… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி…

மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவன்… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி…

-

- Advertisement -

தேங்கிய மழை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய பள்ளி மாணவனை காப்பாற்றியவர் இளைஞர். அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி வெளியானது.மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய மாணவன்… அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி…சென்னை அரும்பாக்கம் உத்தாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட்.  இவரது மகன் செடன் ராயன் (9). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 16 ஆம் தேதி செடன் ராயன் பள்ளிக்கு சென்று வீட்டிற்கு நடந்து சென்றார். அரும்பாக்கம் மங்கள நகர் 1-வது தெருவில் நடந்து செல்லும் போது தேங்கிய மழை தண்ணீர் கால் வைத்த போது செடன் ராயனுக்கு மின்சாரம் தாக்கியது.

இதனை பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓடிச் சென்று மாணவன் செடன் ராயனை காப்பாற்றினார். துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினார். இதையடுத்து மாணவனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் 16 ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. “மழை தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் அதனை கண்ணன் ஓடிச் சென்று காப்பாற்றுவதும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதில் காப்பாற்றிய கண்ணனனுக்கும் கையில் காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.

திராவிட இயக்கம் கட்சியின் ஆட்சியல்ல, ஒரு கொள்கையின் ஆட்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

MUST READ