சென்னை ஈசிஆர் – ஓஎம்ஆர் இடையே ஏற்கெனவே உள்ள 3 பழைய பாலங்களை இடித்து விட்டு ரூ.16 கோடியில் புதிய பாலங்கள் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.சென்னையிலிருந்து புதுச்சேரி செல்ல கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம் (ECR), பழைய மகாப சாலை (OMR) ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளன. இதனிடையே பக்கிங்ஹாம் கால்வாய் செல்கிறது. இவ்விரு சாலைகளிலும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், நிறுவனங்கள் வானளாவி உயர்ந்து நிற்கின்றன. இதனால் இவ்விரு சாலைகளும் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தவையாக உள்ளன.
இச்சாலைகளின் குறுக்கே போதிய பாலங்கள் இல்லாததால், ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு பல கிமீ சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. ஏற்கெனவே உள்ள பாலங்கள் பழுதடைந்துள்ள நிலையில், பழுதடைந்த 3 பாலங்களை இடித்து விட்டு புதிய பாலங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இப்பணிகளுக்கு டெண்டரும் கோரியுள்ளது.
இதன்படி, பெருங்குடி மண்டலம், 181-வது வார்டு, பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர்-ஓஎம்.ஆர் சாலை இணைக்கும் வெங்கடேசபுரம்- இளங்கோநகர் பகுதியில் ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.65 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், பெருங்குடி மண்ட லம், 182 மற்றும் 183-வது வார்டுகளில், பாலவாக்கம் பகுதியில் பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர் – ஓஎம்ஆர் சாலைகளை இணைக்கும் காமராஜர் சாலை- வீரமணி சாலையில் ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கும் பணி ரூ.5.62 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது.
சோழிங்கநல்லூர் மண்டலம், 192, மற்றும் 193-வது வார்டுகளில், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே ஈசிஆர் – ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் துரைப் பாக்கம் பாண்டியன் தெரு- அண்ணாநகர் பகுதியில் ஏற்கெனவே உள்ள பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் மைக்கும் பணி ரூ.5.60 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த 3 பாலங்களும் மொத்தம் ரூ.16.87 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்