அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணை கோரி தாக்கலான மனுக்களை நிராகரித்த உயர்நீதி மன்றம் , இந்த வழக்கில் விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதால் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழுவை உயர் நீதிமன்றம் நியமிக்கிறது. சிறப்பு விசாரணைக் குழுவில், ஜமான் ஜமால், ஆவடி துணை ஆணையர், பிருந்தா, சேலம் துணை ஆணையர், சிநேக பிரியா, அண்ணாநகர் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழக்கு சம்மந்தமாக சம்பந்தப்பட்ட போலீசார் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தற்போது முதல் கட்ட விசாரணை நடந்துள்ளது. சிபிஐ விசாரணை கோருவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைகழக மாணவி வழக்கில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என முடிவுக்கு வரவில்லை – தமிழ்நாடு அரசு