சென்னை மணலி சின்ன மாத்துரை சேர்ந்த இளம்பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். (தமிழ் சாதி) இணையதளத்தில் தனது திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதை பார்த்து மேற்கு மாம்பலம் தெற்கு கவரை தெருவில் வசிக்கும் பூர்ண நந்தன் என்பவர் கடந்த 18ஆம் தேதி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த தான் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக இளம் பெண்ணின் தாயாரிடம் பேசியுள்ளார். அவருக்கு பூரண நந்தன் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இளம் பெண்ணிடமும் பூரண நந்தன் பேசியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி இளம்பெண்ணை தொடர்பு கொண்ட பூரண நந்தன் 22ம் தேதி காலை சூரிய உதயத்தின் போது உன்னைப் பார்க்க வேண்டும். காதல் மொழிகளை கட்டவிழ்த்துள்ளார். இளம் பெண்ணும் 22 ஆம் தேதி அதிகாலை காலை 05.30 மணிக்கு பூரண நந்தன் வசிக்கும் வீட்டிற்கு சென்றபோது கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
இளம் பெண் அதற்கு உடன்படாமல் கோபமாக பேசியுள்ளார். திருமணம் செய்து கொள்ளப்போகிற பெண் தானே, என்ற அடிப்படையில் தான் உன்னிடம் அப்படி நடந்து கொண்டேன் மன்னித்துக் கொள். பூரணநந்தன் நடித்துள்ளார்.
பிறகு இளம்பெண் அணிந்திருந்த ஒன்றேகால் சவரன் சவரன் தங்க செயினை கழற்றிக் கொடுக்குமாறு கேட்டுள்ளார். இளம்பெண் மறுத்த நிலையில் செயினை பூரண நந்தனே கழற்றி உள்ளார். இதை வெளியே யாரிடமும் சொல்லாதே. ஏழு நாட்களுக்குள் நீ வேலை செய்யும் இடத்திற்கு நானே வந்து கொடுத்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
பூரண நந்தனின் நடவடிக்கைகளால் அவர் மோசடி பேர்வழி என்பதை உணர்ந்த இளம் பெண் வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை தாயாரிடம்சொல்லி அழுதுள்ளார். பின்னர் இது தொடர்பாக குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து பூரண நந்தனை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .இதேபோல் வேறு இளம் பெண்களை மோசடி செய்துள்ளாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..