Homeசெய்திகள்சென்னைபால்கனியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பால்கனியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

-

- Advertisement -

பால்கனியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சென்னையில் வீட்டு பால்கனியில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நான்கு வயது சிறுவன் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

death

சென்னை ஐஸ் ஹவுஸ், பள்ளப்பன் தெருவை சேர்ந்த செந்தமிழ் – லட்சுமி தம்பதியினருக்கு, நிதிஷ், நிதேஷ் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் வீட்டின் முதல் மாடியில் உள்ள பால்கனி அருகே விளையாடி கொண்டிருந்தனர். அப்போது பால்கனியின் கம்பி மீது ஏறிய நிதிஷ், சாலையில் வாகனம் வருவதை எட்டி பார்த்துள்ளான்.

அப்போது, திடீரென நிலை தடுமாறி சாலையில் விழுந்த நிதிஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து உயிருக்கு போராடிய நிதிஷ், உடனடியாக இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவன் நிதிஷ் க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

MUST READ