Homeசெய்திகள்சென்னைதொடர் விடுமுறை எதிரொலி- மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

தொடர் விடுமுறை எதிரொலி- மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

-

தொடர் விடுமுறை எதிரொலி- மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொடர்‌ விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும்‌ மெட்ரோ இரயில்‌ பயணிகளின்‌ வசதிகாக நெரிசல்மிகு நேரங்களில்‌ மாலை 05.00 மணி முதல்‌ இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்பட்டு வரும்‌ மெட்ரோ இரயில்‌ சேவை, இன்று (11.08.2023) மட்டும்‌ இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மெட்ரோ இரயில்‌ பயணிகள்‌ நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில்‌ இயக்கப்படும்‌ மெட்ரோ இரயில்‌ சேவையை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌. மேற்கண்ட மெட்ரோ இரயில்‌ நீட்டிப்பு சேவைகள்‌ இன்று (11.08.2023) மட்டுமே” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ