spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅம்பத்தூர் அருகே ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட மருத்துவர் கைது

அம்பத்தூர் அருகே ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட மருத்துவர் கைது

-

- Advertisement -

சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் முகமத் (30). தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயது  பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் சிறிது நாட்களில் தனது கணவர் ஓரினசேர்க்கையில் ஈடுப்படுவதும்,வேறு ஒரு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பதும் தெரியவந்தது.

அம்பத்தூர் அருகே ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட மருத்துவர் கைதுஇதனால் மன முடைந்த அந்த பெண் அம்பத்தூர் காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றியதாக கூறி முகமத் மீது புகார் அளித்ததன் பேரில் அவரை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரனை மேற்கொண்டதில் அவர் ஓரினசேர்க்கையில் ஈடுப்பட்டதும், தனது மனைவியை துன்புறுத்தியதும் தெரியவந்தது.

we-r-hiring

அம்பத்தூர் அருகே ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட மருத்துவர் கைதுஇதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடித்தனர்.  இதனிடையே கைது செய்யப்பட்ட மருத்துவர் முகமத் நீதிமன்றத்தில் இருந்து சிறைக்கு அழைத்து செல்வதை வீடியோ எடுக்க முயன்ற செய்தியாளர்களை தடுத்து 3000 வேண்டுமானால் தருகிறேன் வீடியோ எடுக்க வேண்டாம் என கூறி கைது செய்யப்பட்ட மருத்துவரின் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இந்த சம்பவம் காவல் நிலையம் முன்பு சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

MUST READ