Homeசெய்திகள்சென்னைஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்ட KGF விக்கி

ஊழியரை தாக்கியதால் கைது செய்யப்பட்ட KGF விக்கி

-

கடை ஊழியர் பணத்தை கையாடல் செய்ததால் கடையில் கட்டி வைத்து கொடுமை செய்த வழக்கில்  தலைமறைவாக இருந்தவர் கைது. அடிக்கடி குற்ற வழக்குகளில்  ஈடுபட்டு வந்ததால் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு பாஜக கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை  பழைய வண்ணாரப்பேட்டை நல்லப்பவாத்தியார் தெருவைச் சேர்ந்த விக்கி  (எ) KGF விக்கி இவர் வண்ணாரப்பேட்டை MC ரோடு பகுதியில் KGF MEN’S WEAR  துணி கடை வைத்து  நடத்தி வருகிறார். இவர் முன்னாள் பாஜக இளைஞரணி நிர்வாகி.

ஊழியரை தாக்கியதால் ! கைது செய்யப்பட்ட KGF விக்கி !

சென்னை வண்ணாரப்பேட்டையில் பிரபல துணிக்கடையில் வேலை பார்த்த ஊழியர், ஒரு லட்சம் ரூபாய் கையாடல் செய்து 6 மாதமாக தலைமறைவாகி  மீண்டும் வேலை தேடி வந்த போது, கடை உரிமையாளர் குடோனில் வைத்து இரும்பு ராடால் அடித்த சம்பவத்தில் சேலத்தில் தலைமறைவாக இருந்த கடை உரிமையாளரை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த கடையில் வேலை செய்து வந்த எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 19 வயதுடைய ரிஸ்வான் என்ற இளைஞர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு ரிஸ்வான், கடையில் வேளையை விட்டு நின்றுவிட்டு மீண்டும் கடந்த 16  தேதி அன்று கடைக்கு வந்துள்ளார்.

அப்போது  கடை உரிமையாளர் KGF விக்கி  ரிஸ்வானை பார்த்து, நீ வேலை செய்யும் போது 1  லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாகவும் அதை திருப்பி கேட்ட போது  பணம் கொடுக்க மறுக்கவே, கடை உரிமையாளர் விக்னேஷ் கூறியதன் பேரில் ரிஸ்வானை குடோனில் வைத்து இருவர் இரும்பு ராடால் அடித்துள்ளனர்.

இதனையடுத்து ரிஸ்வான் உறவினர் மூலம்  30,000 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு வந்து கொடுத்துள்ளனர். மீதமுள்ள பணத்தை கொண்டு வர சொல்லி ரிஸ்வானை அனுப்பி உள்ளனர். இதனையடுத்து காயமடைந்த ரிஸ்வான் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து  தண்டையார்பேட்டை கார்னேசன் நகர் பகுதியைச் சேர்ந்த மதன் குமார், ஆலந்தூர் கிண்டி பகுதியைச் சேர்ந்த சசிகுமார்(19), கொருக்குப்பேட்டை சேர்ந்த சச்சின் குமார்  (19)  ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஊழியரை தாக்கியதால் ! கைது செய்யப்பட்ட KGF விக்கி !

தலைமறைவாக இருந்த KGF  கடை உரிமையாளர் விக்கியை , போலீசார்  தனிப்படை அமைத்து தேடி வந்தனர். YOUTUBE மூலம் வீடியோ பதிவு  செய்து சேலத்தில் பதுங்கி  இருப்பதாக தனிப்படை போலீசார்க்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில்  தனிப்படை போலீசார் சேலத்திற்கு சென்று  விக்கியை கைது செய்து சென்னை அழைத்து வரப்பட்டு விசாரணை செய்ததில் கடையில் கணக்கு வழக்கு பார்க்கும் போது  கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம் G. PAY, PHONE PAY, மூலம் பணத்தை வாங்கியது  தெரியவந்தது .

இதனையடுத்து 1 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்து, ரிஸ்வான் வேலை விட்டு நின்றது ஒத்து போனது தெரியவந்தாக தெரிவித்தார். இதனையடுத்து KGF விக்கி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

MUST READ