spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஎன்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணம் – முதல்வர் பங்கேற்பு

என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணம் – முதல்வர் பங்கேற்பு

-

- Advertisement -

பீகார் எஸ் ஐ ஆர் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுத்து திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆர்.இளங்கோ திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமணம் – முதல்வர் பங்கேற்புதிராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டத்துறை செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான  என் ஆர் இளங்கோவன்வின் மகள் திருமணம் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷனல் சென்டரில் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திருமண விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கழக திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். கழகம் மீதும், தலைவர் கலைஞர் மீதும், என் மீதும் அன்பு வைத்து தொடர்ந்து கழகத்தில் பணியாற்றி வருகிறார் என்.ஆர்.இளங்கோ. அவரது தந்தையை போலவே கழகத்தின் மீது, கொள்கை மீது ஈடுபாடு கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

we-r-hiring

எல்லா நீதிமன்றங்களிலும் தனது வாதத்தை சிறப்பாக செய்து காட்டியவர் என்.ஆர்.இளங்கோ. அவரின் வாதத் திறமையை பார்த்து தான் நமது தலைவர் அவருக்கு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கினார். மூத்த வழக்கறிஞர்களும் அவரது திறமையை பாராட்டி உள்ளனர். நீதியை நிலைநாட்டும் அவரது திறமையை கழகம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்தோம். அவரும் தமிழ்நாட்டின் உரிமைக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி, உரக்க குரல் கொடுத்து கொண்டு உள்ளார். கழகத்தின் வார் ரூம் In charge என்ற பணியை அவருக்கு கொடுத்து உள்ளோம். தேர்தல் நேரத்தில் வழக்கறிஞர் அணி தயாராக வைத்து கொள்ள கூடியவர்.

இன்று நாடு எதிர்கொண்டு வரும் பிரச்சனையை நாம் அறிவோம். பீகார் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் திருத்தம் என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படுத்தி உள்ளது என்று நான் அதிகம் கூற தேவை இல்லை. இதற்காக தான்  சகோதரர் ராகுல் காந்தி நடைபயணத்தை மேற்கொண்ட வருகிறார். சகோதர் ராகுல் காந்தி உடன் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றேன். பீகார் போன்ற நிலைமை தமிழ்நாட்டில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும் அதை தடுத்து நிறுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருபவர்தான் என் ஆர் இளங்கோ. இதற்காக தலைமை கழகம் சார்பில் அவரை மனதார பாராட்டுகிறேன்

நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதில் என் ஆர் இளங்கோ உறுதியாக உள்ளார். இதற்கு எடுத்துக்காட்டு தான் அவர் இந்த திருமண மாங்கல்ய தட்டில் வைத்திருந்த அரசியல் அமைப்பு சட்ட புத்தகம். நாளை ஜெர்மனி இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார பயணமாக நான் மேற்கொள்ள இருக்கிறேன். நம்ம திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்றுவதற்கு பிறகு தமிழ்நாட்டிற்கு இதுவரை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்களை நாம் ஈர்த்து இருக்கிறோம். இதற்கான என்னுடைய வெளிநாட்டு பயணங்கள் முதலீட்டாளர்கள் துணை நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மனப்பூர்வமாக ஆர்வம் காட்டுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த பயணத்தில் என்ன திட்டமிட்டு இருக்கோம் என்பது பற்றி விமானத்தில் ஏறி புறப்படுவதற்கு முன்பு நிச்சயமாக பத்திரிக்கையாளர் சந்தித்து அதை எல்லாம் சொல்ல போகிறேன். நான் அதற்கு முன்னாடி நடைபெறக்கூடிய இந்த திருமண விழாவில் ஒரு முக்கியமான நிகழ்வு அறிவிக்க விரும்புகிறேன். நம்முடைய தமிழ் சமுதாயமும் சுயமரியாதையோடு தலை நிமிர்ந்து நடைபெறுவதற்கு காரணம் தந்தை பெரியார். தந்தை பெரியாரைப் பற்றி எழுதின பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் சொன்னார்கள் தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் என எழுதினார். பகுத்தறிவு தந்தை பெரியாரின் சிந்தனை உலகத்துடன் காட்சியை நாம் இந்த பயணத்தில் பார்க்க போறோம் உலகில் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்து இருக்கக்கூடிய புகழ்மிக்க அறிவு சார் நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவு ஆசான் தந்தை பெரியாருடைய திருவுருவப் படம் திறக்கப்பட இருக்கிறது. அதை எனது திருக்கரங்களால் திறந்து வைக்க உள்ளதை  எண்ணிப் பார்க்கிறதுதான் இப்பொழுது மகிழ்ச்சி கடலில் மிதந்து கொண்டிருக்கிறேன்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேசி எழுதி இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்துக்கானதிலிருந்து அனைவருக்கும் பொதுவானது அவர் வலியுறுத்தின சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, ஏற்றத்தாழ்வு, தன்னம்பிக்கை அனைவரும் சமம் ஆகிய கருத்துக்களுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட அறிவுமதி உலக அளவில் அடையாளம் காணப்பட்ட அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டுக்கு பெருமை அதற்கு முன்னாடி இளங்கோ இல்லத்தில் நடைபெறக்கூடிய திருமணத்தை கலந்துகொண்டு நாளை வெளிநாட்டுக்கு சொல்ல இருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சாமிநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் உள்ளிட்ட திமுக தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மூத்த தலைவர் கவலைக்கிடம்…மருத்துவமனைக்கு விரைந்த தமிழக முதல்வர்…

MUST READ